டெக்னோஸ்கோப்[6] – வீடியோவில் உள்ள ஆடியோவை டவுன்லோட் செய்யும் முறை

யுடியூப் வீடியோக்களை ஆடியோவாகவும், வீடியோவாகவும்  டவுன்லோட் செய்யும் முறை

யுடியூப் வீடியோக்களைப் பலவிதங்களில் பார்த்துப் பயன்படுத்தலாம். யுடியூப் வீடியோவை அப்படியே வீடியோவாகவும் (அதிலுள்ள ஆடியோவுடன் சேர்த்து அப்படியே), வீடியோவில் உள்ள  வீடியோவை தவிர்த்து ஆடியோவை மட்டும் தனியாகவும் டவுன்லோட் செய்ய முடியும்.

யுடியூப் வீடியோவை நாம் டவுன்லோட் செய்யும் போது,  ஃபைலில் அளவு பெரியதாக இருப்பதால் அது நம் சாதனத்தில் பதிவாக அதிக இடத்தை எடுத்துக்கொள்ளும். வீடியோவை தவிர்த்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்தால் ஃபைலின் அளவு சிறியதாக இருப்பதால் குறைவான இடத்தையே எடுத்துக்கொள்ளும்.

அதாவது வீடியோவை வீடியோவாக டவுன்லோட் செய்ய MP4 ஃபார்மேட்டையும், யுடியூப் வீடியோவை ஆடியோவாக டவுன்லோட் செய்ய MP3 ஃபார்மேட்டையும் தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்வதற்கு www.yout.com என்ற வெப்சைட்  உதவுகிறது.

யுடியூப் வீடியோக்களை வீடியோவாகவும் (MP4), ஆடியோவாகவும் (MP3) ரெகார்ட் செய்யும் முறை

  1. பிரவுஸரில் www.yout.com என்ற வெப்சைட் முகவரியை டைப் செய்துகொள்ள வேண்டும். இப்போது Yout என்ற தலைப்புடன் திரை ஒன்று வெளிப்படும். இதன் அடியில் வெளிப்படும் சர்ச் பாரில் எந்த யுடியூப் வீடியோவை டவுன்லோட் செய்ய வேண்டுமோ அதன் முகவரியை பேஸ்ட் செய்ய வேண்டும்

  1. உதாரணத்துக்கு சர்ச் பாரில் எனக்கு விருப்பமான வீடியோ லிங்க்கை (https://www.youtube.com/watch?v=sqLpJ6hUbZg&t=1355s) டைப் செய்துள்ளேன்.

  1. உடனடியாக, அந்த வீடியோவை வீடியோவாகவும், ஆடியோவாகவும் ரெகார்ட் செய்ய உதவும் திரை வெளிபப்டும். இப்போது கிடைக்கும் திரையில் கீழ்காணும் விவரங்களை கவனிக்கவும்.

MP3 (Audio)

MP4 (Video)

GIF (Image)

இதில் MP3 (Audio) என்ற விவரம் வீடியோவில் உள்ள ஆடியோவாக மட்டும் ரெகார்ட் செய்ய உதவும்.

இதில் MP4 (Video) என்ற விவரம் வீடியோவை அப்படியே  வீடியோவாக ரெகார்ட் செய்ய உதவும்.

நாம் வீடியோவில் உள்ள ஆடியோவை மட்டும் ரெகார்ட் செய்வதற்காக MP3 என்ற விவரத்தை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இறுதியில் RECORD MP3 என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

4. உடனடியாக  வீடியோவில் உள்ள ஆடியோ  டவுன்லோட் ஆகத்தொடங்கும். வீடியோவின் நீளத்துக்கு ஏற்ப டவுன்லோட் ஆகும்  நேரமும் வேறுபடும். டவுன்லோட் ஆன ஃபைலை விண்டோஸ் மீடியா பிளேயர், VLC மீடியா பிளேயர் போன்று ஏதேனும் ஒரு சாஃப்ட்வேர் மூலம் கண்டும், கேட்டும் ரசிக்கலாம்.

எழுத்தும் ஆக்கமும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜூன் 11, 2019

DISCLAIMER

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட்டுகள் மற்றும் சாஃப்ட்வேர்களின் தரத்துக்கும் நம்பகத்தன்மைக்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள சாஃப்ட்வேர்கள், வெப்சைட்டுகள், நிறுவனங்களின் பெயர்கள், அவற்றின் தயாரிப்புகள், புகைப்படங்கள், லோகோ மற்றும் காப்புரிமை ஆகிய அனைத்தும் அந்தந்த நிறுவனங்களுக்கே உரிமையுடையது.

அதேபோன்று  இந்தக் கட்டுரையை நீங்கள்  படிக்கும்போது  வெப்சைட்டுகள் மற்றும் சாஃப்ட்வேரின் வடிவமைப்பில் அவர்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்திருந்தால், அதற்கும் கட்டுரை ஆசிரியரோ அல்லது கட்டுரை வெளியாகியுள்ள இந்த வெப்சைட்டோ எந்தவிதத்திலும் பொறுப்பேற்க இயலாது.

(Visited 246 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari