#தொழில்நுட்ப இங்கிதங்கள்!
உங்களிடம் நன்றாக பேசிக்கொண்டிருப்பபர்கள் திடீரென உங்களை ஒதுக்கும்போது இரண்டு விஷயங்களை ஆராய வேண்டும்.
1. நேரடியாக உங்களால் அவர் ஏதேனும் பாதிக்கப்பட்டிருக்கிறாரா? நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏதேனும் காயப்படுத்தி இருக்கிறீர்களா?
2. உங்களுக்கு ஒத்துவரவில்லை என உங்கள் நட்பில் இருந்து நீங்கள் துண்டித்தவர் அந்த நண்பருடன் தொடர்பில் இருந்து, அவர் வேண்டுமென்றே உங்கள்மீது ஏதேனும் அவதூறு பரப்புகிறாரா என்பதை கவனிக்க வெண்டும். உதாரணத்துக்கு நீங்கள் உங்கள் நண்பர் குறித்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லியதாக நட்பில் இருந்து துண்டிக்கப்பட்டவர் புறம் சொல்லி இருக்கலாம். நீங்கள் மூவரும் நட்பாக இருந்த காலகட்டத்தில், பொதுவாக பேசும்போது உங்கள் நண்பர் குறித்து ஜாலியாக சொன்னதை திரித்து கடுமையாக்கி நண்பருக்குள் திணித்திருக்கலாம்.
உதாசினப்படுத்தலுக்கு, முன்னதுதான் காரணமென்றால் உங்கள் மனசாட்சியே உங்களுக்கு எடுத்துரைக்கும்.
பின்னதுதான் காரணமென்றால் நீங்கள் ஒதுக்க வேண்டியது தற்போது நீங்கள் நட்பில் இருந்து நீக்கியவர் சொன்னதை கேட்டு உங்களை உதாசினப்படுத்தும் தற்போது நண்பராக இருப்பவரையே. காரணம், எடுப்பார் கைப்பிள்ளை மனநிலையில் உள்ளோர் என்றைக்கும் ஆபத்தானவர்களே.
இந்த நியதி நேரடியாக பழகும் நட்புகளுக்கும் பொருந்தும், வெர்ச்சுவல் இணைய நட்புகளுக்கும் பொருந்தும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி
பிப்ரவரி 2, 2022 | புதன் | இரவு 8 மணி