மன அழுத்தம்!
சில தினங்கள் முன்பு, ‘டாணாக்காரன்’ படம் ஓடிடி-யில் பார்க்கும் வாய்ப்பு. போலீஸாய் வருவதற்கு இத்தனை கஷ்டங்கள் அனுபவிக்கிறார்களா என ஒரு க்ஷணம் தோன்றியது. அடுத்த க்ஷணம் இதில் வரும் ஈஸ்வர்மூர்த்தி போல் எல்லா நிறுவனங்களிலும் அக்கிரமம் செய்யும் அதிகாரியாக ஒரு ஆண் ஈஸ்வரமூர்த்தியோ அல்லது பெண் ஈஸ்வரமூர்த்தியோ இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன, டாணாக்காரனில் போலீஸ் வேலையில் சேர்வதைப் பற்றி சொல்லி இருப்பதால் அடி உதை மிரட்டல் இவற்றை பிரதானமாக காட்டி இருக்கிறார்கள். மற்ற பணி இடங்களில் அடி உதை இருக்காதே தவிர மனோ ரீதியாக எத்தனை எத்தனை அழுத்தங்கள்…
அதனால்தான் எங்கள் நிறுவனத்தில் பணியாளர்களுக்கு கூடுமானவரை வேலையில் நேர்த்தியும் கவனமும் இருக்க வலியுறுத்துகிறோமே தவிர வேறு மாதிரியான பிரச்சனைகளும் எந்த நிலையிலும் வராத அளவுக்கு பார்த்துக்கொள்கிறோம்.
என்ன ஒன்று, வேலையில் நேர்த்தியும் கவனமும் இருக்க வலியுறுத்துவதையே மனஅழுத்தம் என நினைப்பவர்கள் எல்லா காலங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று கொஞ்சம் கூடுதலாக. அவ்வளவே!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 6, 2022 | திங்கள்