குழந்தைப் பருவம்!
நம் குழந்தைப் பருவம்
என்பது பெற்றோர்
நமக்குக் கொடுத்த
அன்பளிப்பு.
நம் குழந்தைப் பருவத்தை
மற்றவர்களுக்கு
உதாரணமாக்கும் அளவுக்கு
நாம் வாழ்ந்து காட்டுவது
பெற்றோருக்கு நாம்
கொடுக்கும் அன்பளிப்பு!
விலைமதிப்பில்லா
அன்பளிப்பு அது!
எல்லோராலும்
கொடுக்கக் கூடியது அது!
பல சந்தர்ப்பங்களில்
அந்த அன்பளிப்பை
நான்
வெவ்வேறு வடிவங்களில்
கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்
அல்லது
அன்பளிப்பு அளிப்பதற்கான
சந்தர்ப்பங்களை
நானே
உருவாக்குகிறேன்!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 22, 2022 | வெள்ளிக்கிழமை
#காம்கேர்_கவிதை #compcare_kavithai
(Visited 347 times, 1 visits today)