எப்படித்தான் எழுதுவது?
பொதுவாக நேர்காணல்களில் நேர்காணல் செய்யப்படுபவர் என்ன வட்டார மொழியில் / வழக்கு மொழியில் (Slang) பேசுகிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். முக்கியமாக நேரடியாக அவர் சொல்வதை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடும்போது.
ஆனால் என்ன நடக்கிறது தெரியுமா? நேர்காணல் செய்பவர் எந்த வட்டார மொழியை / வழக்கு மொழியைப் பேசுகிறாரோ அதை வைத்து எழுதுகிறார்கள்.
நேர்காணல் செய்த பத்திரிகையாளர் கட்டுரை / செய்தி எழுதும்போது நேர்காணல் செய்யப்பட்டவரே எழுதுவதைப் போல கருதி அந்த க்ஷணம் உடலும் உள்ளமும் எண்ணமும் சொல்லும் அவராகவே உருமாறி எழுத வேண்டும்.
ஒருவர் சொல்வதை அப்படியே Direct Speech ஆக எழுதும் போது அவர் பயன்படுத்தும் வட்டாரமொழி இருந்தால் அந்த கட்டுரைக்கு / படைப்புக்கு அது கூடுதல் பலம்.
அதுவே In Direct Speech ஆக இன்னார் இப்படிச் சொன்னார் என்று எழுதும்போது வழக்கு மொழி தவிர்த்து தமிழில் அழகாக இலக்கண சுத்தமாக எழுதலாம்.
அதைவிட்டு எந்த இடத்திலும் நெறியாளர் / பேட்டி எடுப்பவரின் வழக்கு மொழியை பேட்டி கொடுப்பவரின் வழக்கு மொழியாக்கிவிடக் கூடாது.
இது அந்த எழுத்தின் வலுவை குறைக்கும்.
இதை ஒவ்வொரு முறையும் சொல்லி சொல்லி அலுத்துவிட்டது என்பதால் சொல்லாமல் விட்டு விட்டேன் என நினைக்க வேண்டாம். இன்னும் கூடுதல் கனிவுடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அது கடமையும் கூட.
இளம் பத்திரிகையாளர்களுக்கு / எழுத்தாளர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது நம் கடமைதானே?
நேற்றும் அப்படியே!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூலை 23, 2022 | சனிக்கிழமை