அழுத்தி வைக்கும் அன்பும் மன அழுத்தமாகும்!
இங்கு எல்லோரும் உங்களைப் போல அறிவு ஜீவி கிடையாது. எல்லோருக்கும் உள்ளுக்குள் நீங்கள் பிறர் மீது காண்பிக்கும் அன்பையும், கொடுக்கும் ஆசிர்வாதத்தையும் புரிந்துகொள்ளும் திராணி கிடையாது.
வெளியே காண்பிக்கப்படும் அன்புதான் மதிக்கப்படுகிறது. வெளியே சொல்லப்படும் ஆசிகள்தான் போற்றிக்கொண்டாடப்படுகிறது.
அவைதான் மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகி பல்கிப் பெருகவும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது.
மற்றவர்கள் போற்றவும் வேண்டாம், கொண்டாடவும் வேண்டாம் என ‘விட்டேத்தியாக’ நினைக்காமல் நமக்காகவாவது நமக்குள் இருக்கும் அன்பை சந்தர்ப்பங்களை உண்டாக்கிக்கொண்டு வெளிப்படுத்துவோம்.
உள்ளுக்குள் அடக்கி வைக்கும் வேதனைகள் மட்டும் மன அழுத்தத்துக்குக் காரணம் ஆகாது, அழுத்தி அழுத்தி மனதுக்குள் வைத்துக்கொள்ளும் அன்பும் மன அழுத்தத்தில் கொண்டுவிடும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஆகஸ்ட் 17, 2022 | புதன் | காலை 6 மணி