#USA: ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்!

ஐஸ்கிரீம் சுவையும், கல்லூரி மதிப்பெண்களும்!

#usatrip2025_ckb-9

டெட் ட்ரூஸ்!

அமெரிக்காவில் இந்த நிறுவனத்தின் ஐஸ்க்ரீமின் சுவை நம்மை கட்டிப் போடுகிறது என்றால், அங்கு பணி புரியும் இளைஞர்களின் நினைவாற்றல் என்னை வியக்க வைக்கிறது. ஆம். ஒரு வீட்டில் இருந்து பத்து பேர் வந்து பத்துவிதமான ஐஸ்க்ரீம் மற்றும் டாப்பிங் சொன்னாலும் இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் எதையுமே பேப்பரிலோ அல்லது ஐபாட் / மொபைலிலோ குறிப்பு எடுத்துக்கொள்வதில்லை. சொன்னது சொன்னபடி ‘ஒரு மாற்றுக் குறையாமல்’ அவரவர்கள் கேட்ட ஐஸ்க்ரீம் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

எப்படி இது சாத்தியம் என நான் வியந்து கேட்டதற்கு அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள், ‘இந்த நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் பள்ளி / கல்லூரி டாப்பர்கள். படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் முன்னணியில் இருக்கும் இளைஞர்களையே பெரும்பாலும் இவர்கள் வேலைக்கு எடுக்கிறார்கள்’. செவிவழி செய்தி இது.

இதைவிட ஆச்சர்யமான மற்றொரு விஷயம், அவர்கள் பள்ளி/கல்லூரி மதிப்பெண் (கிரேட்) குறைந்தால் வேலையைவிட்டு எடுத்து விடுவார்களாம்.

இப்படிப்பட்ட நிறுவனங்களை நினைத்தால் மனதுக்குள் நிறைய பெருமை, கொஞ்சம் பொறாமை (நேர்மறையாகத்தான்). நம்மால் இப்படி வேலை வாய்ப்பை உருவாக்க முடிவதில்லையே என்பதனால்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 28, 2025 | புதன்

(Visited 2,004 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon