விருது வாங்கும் வயதான சிறுவன்!
சென்ற பதிவில் என் புகைப்படம் எதையுமே நான் கொடுக்காமல் என்னை வரைந்து கொடுக்க சொன்னதற்கு ஏஐ புரிந்து கொண்டு மிக சரியாக (சென்ற பதிவை பார்க்கவும். Link in comment) வரைந்து தந்தது அல்லவா?
இன்று ஒரு சிறுவன் ஒரு புத்தகம் எழுதி இருப்பதாக வரையச் சொன்னேன். ஏஐயும் சிரமேற்கொண்டு வரைந்தது.
அந்த சிறுவனுக்கு அந்த நூலுக்காக விருது கிடைத்திருப்பதாய் வரைய சொன்னேன். ஏஐ இதையும் சிரமேற்கொண்டு வரைந்து கொடுத்தது. படத்தைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.
ஒரு நூல் எழுதி விருது கிடைக்க வேண்டுமென்றால் வயதானால்தான் விருது கிடைக்கும் என்று பொருள்படும் வகையில் படம் அமைந்திருந்தது. சிரிப்பு வராதா பின்னே?
இதில் இருந்து என்ன தெரிகிறது என் லேப்டாப்பிலும் மற்ற சாதனங்களிலும் காம்கேர் கே. புவனேஸ்வரியை யார் என்று புரிந்து கொண்டு, என்னைப் பற்றிய இதர விஷயங்களை இன்டர்நெட்டில் இருந்தும், வெப்சைட்டிலும் சமூக வலைதளங்களில் இருந்தும் அறிந்து கொண்டு 99.9 சதவிகிதம் சரியான பொருத்தமான விடையை கொடுக்கிறது ஏஐ.
ஆனால் இதுவே பொதுவான மனிதர்கள் என்றால் ஏஐக்குள் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லாததால் விருது என்றவுடன் பொதுவாக விருது பெறும் எழுத்தாளர்கள் வயதானவர்களாகத்தான் இருப்பார்கள் என்ற அனுமானத்துடன் வரைந்து கொடுத்துவிட்டது.
அதுவும் அந்த சிறுவன் வயதானால் எப்படி இருப்பானோ அப்படிப்பட்ட உருவ அமைப்பில்.
ஏஐ இப்படித்தான்! நாம் தான் பழக்க வேண்டும். வேலை வாங்க வேண்டும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மே 27, 2025 | செவ்வாய்