கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்!

கண்ணியமான காதல், அருமையான திரைப்படம்!

இந்தியா, காஷ்மீர், இராணுவ வீரர்கள், ஹைத்ராபாத் இளவரசி இவற்றுடன் வெகு கண்ணியமான காதல். இத்தனை கண்ணியமாகக் கூட திரைப்படத்தை எடுக்க முடியும் என நிரூபித்துள்ளார்கள். படத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் இடத்தைவிட்டு நகர விடாமல் பார்க்க வைத்தத் திரைப்படம்.

Simply telling Very Decent Film. காட்சி அமைப்புகள், நடிப்பு, வசனங்கள் என ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு பிரமாதம்.

‘நாட்டுக்காகப் போரடுபவன் வீரன், தர்மத்துக்காக போராடுபவன் ராமன்’ – எனை ஈர்த்த வசனங்களுள் ஒன்று.

சில விஷயங்கள் / சில நிகழ்வுகள் நடந்து சில நாட்கள் வரை நம் மனதின் மேல் தட்டில் அமர்ந்துகொண்டு அவ்வப்பொழுது எட்டிப் பார்த்து மகிழ வைக்கும் அல்லவா?

அந்த வகையில் பார்த்து ஒரு வார காலம் ஆனாலும் இப்போது வரை அவ்வப்பொழுது மனதுக்குள் எட்டிப் பார்த்து நிறைவைக் கொடுக்கிறது…. சீதாராமம்!

-காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

செப்டம்பர் 23, 2022 | வெள்ளி

(Visited 587 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon