அதைப் போல், இதைப் போல் அல்ல, காம்கேர் போல!

 

இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், காக்னிஸண்ட், சோகோ போல அல்ல, ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ போல!

1992-ல் ஆரம்பித்த எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு வயது 31 நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் குறித்த ஒரு ஆவணத் தொகுப்பிற்கு தேவையானதை தொகுத்துக் கொண்டிருப்பதால் அவ்வப்பொழுது கிடைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களை அவ்வப்பொழுது இங்கு உங்களுடனும் பகிர்ந்து வருவதை கவனித்திருப்பீர்கள்.

அந்த வகையில் நேற்று எங்கள் காம்கேர் நிறுவனத்தின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தேன். அது தவிர வேறெந்த விசேஷமும் இல்லை நேற்று, ஆனாலும் எத்தனை வாழ்த்துகள். வாழ்த்து மழையில் நனைந்தேன். அனைவருக்கும் நன்றி!

ஒருவர் நான் இப்போதுதான் நிறுவனம் ஆரம்பித்திருப்பதாக நினைத்து இன்ஃபோஸில், விப்ரோ, சோகோ போல வளர வாழ்த்துகள் என்று வாழ்த்தி இருந்தார் தனித்தகவலில் (மெசஞ்சரில்).

நான் கொஞ்சம் யோசித்து, ‘தங்கள் வாழ்த்துக்கு நன்றி. கடந்த 31 வருடங்களில் எங்கள் காம்கேர் நிறுவனம்போல் சொந்தமாக நிறுவனம் தொடங்க உத்வேகம் கொடுத்து பலரை உருவாக்கி உள்ளேன்.’ என்றேன்.

கர்வத்தினால் அல்ல, பொங்கி வரும் தன்னம்பிக்கையினால்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
November 28, 2022 | திங்கள்

(Visited 272 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon