வலி!
நமக்குப் புதிதாக அறிமுகம் ஆகும் யாராவது நம்மை காயப்படுத்தி பேசியதாக நினைத்தால் வருத்தப்பட்டு மனதுக்குள் அழுவதற்கு முன் ஒரு விஷயத்தை நினைவில் வைக்க வேண்டும்.
நாம்தான் காயப்பட்டிருப்போமே தவிர அவர்கள் காயப்படுத்தும் நோக்கத்தில் பேசி இருக்க மாட்டார்கள். அவர்களின் இயல்பாக இயல்புபடி பேசி இருப்பர்கள்.
திரும்பவும் சொல்கிறேன், இயல்புபடி பேசி இருப்பார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன். அவர்கள் இயல்பே காயப்படுத்துவது என சொல்லவில்லை.
ஒவ்வொருவருக்கும் மனம் ஒவ்வொரு மாதிரி. காயப்படும் விளிம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எல்லையில் இருக்கும். நாம் மிக சென்சிடிவாக இருந்துகொண்டு மற்றவர்களை குறை சொல்லக் கூடாது.
ஒருவருக்கு லேசாக அடித்தாலே வலிக்கும். மற்றொருவருக்கு வேகமாக அறைந்தாலும் வலிக்காது. வலி பொறுக்கும் தன்மை உடலுக்கு மட்டும் அல்ல, மனதுக்கும் பொருந்தும்.
எனவே முன் அனுமானத்துடன் யாரையும் அணுகாமல் இருப்பது நம் மன ஆரோக்கியத்துக்கு நல்லது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 23, 2022 | புதன்