தட்ஸ் ஆல்! அவ்ளோ தான்!
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் இருந்து நேர்காணல் என சொல்லி இருந்தேன் அல்லவா? அதில் மற்றொரு கேள்வி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு தொழில்முனைவராக உங்களுக்கு பர்சனலாக பிடிக்காத விஷயம் என்ன?
ஏதேனும் ஒரு வேலையை முடிக்க நேரம் அதிகம் எடுத்துக்கொண்டாலோ அல்லது முடிக்க முடியவில்லை என்றாலோ அதற்கு ‘எனக்கு உடம்பு சரியில்லை என்றோ…’ (உண்மையாகவே உடம்பு சரியில்லாமல் இருந்தாலும் கூட) அல்லது ‘மறந்துட்டேன் என்றோ…’ (உண்மையாகவே மனதில் இருந்து தவறுதலாக அந்த விஷயத்தை ஸ்கிப் செய்துவிட்டாலும் கூட) அல்லது ‘பிசியாக இருக்கிறேன் என்றோ…’ (உண்மையில் பிசியாக இருந்தாலும் கூட) சொல்ல வாய் வராது. ஏன் எனில் அப்படிச் சொல்வதை நான் என் தொழிலுக்கு செய்யும் கெளரவ குறைவாகக் கருதுகிறேன். பர்சனலாகவும் எந்த ஒரு விஷயத்துக்கும் இந்த மூன்று பதில்களில் எது ஒன்றையும் மறந்தும் சொல்ல மாட்டேன்.
அப்படி பதில் சொல்லியே ஆக வேண்டிய சூழலில் ‘சாரி, விரைவில் முடித்துத்தருகிறேன்…’
தட்ஸ் ஆல்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 22, 2022 | செவ்வாய்