
வெற்றிலையும் பாக்கும்!
நம்மைச் சுற்றியுள்ள சமுதாயம் வணிகமயமாகிக் கொண்டிருந்தாலும், இன்னும் பாரம்பர்யத்தை பின்பற்றும் சிறு வியாபாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வெற்றிலை விற்கும்போது வெறும் வெற்றிலையைக் கொடுக்கக் கூடாது என கூடவே ஒரு பாக்கையும் வைத்து விற்பனை செய்யும் பெட்டிக்கடைக்காரரே சாட்சி. அதுவும் நம்ம சென்னையில்!
ஒவ்வொரு முறை நாங்கள் வெற்றிலை வாங்கும்போதும் அவரை நினைத்து பெருமைப்படுவதை தவிர்க்க முடிவதில்லை.
வெற்றிலையை, கொஞ்சம் கற்பூரவல்லி இலைகள், துளசி இலைகள் மற்றும் இஞ்சி சேர்த்து எலுமிச்சைச் சாறு பிழிந்து டீ தயாரித்து குடிப்போம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க வெற்றிலை உதவுகிறது என்பது கூடுதல் தகவல்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
டிசம்பர் 16, 2022 | வெள்ளிக்கிழமை
(Visited 21 times, 1 visits today)







