ஸ்ரீபத்மகிருஷ் 2023 – சிறைச்சாலை நூலகங்களுக்கு புத்தக நன்கொடை!

பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டன!

சிறைச்சாலை கைதிகளுக்காக புத்தக அன்பளிப்பு கொடுக்க நான் எழுதியுள்ள தொழில்நுட்ப நூல்களை, (அண்மைக்கால தொழில்நுட்பம், புது எடிஷன்) எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் ஜனவரி 13, 2023 அன்று முறையாக ஒப்படைத்தோம். மொத்தம் 11 தலைப்புகள், 111 புத்தகங்கள்!

2008-ல் தான் முதன்முறையாக ஒரு கைதி, தான் இருக்கும் சிறைச்சாலையில் இருந்து ஜெயிலரின் கையொப்பமும் சீலும் பெற்று நான் எழுதிய தொழில்நுட்பப் புத்தகங்கள் தேவை என இன்லெண்ட் கடிதம் எழுதினார். அந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் அவர்களின் தேவைக்கேற்ப *எங்களின் சக்திக்கு ஏற்ப* நூல்களை சிறைச்சாலை கைதிகளுக்காக அனுப்ப ஆரம்பித்தேன்.

2023 புத்தகக் காட்சியில் ஸ்டால் எண் 286-ல் சிறைச்சாலை கைதிகளுக்காக புத்தகங்களைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்ற அறிவிப்பைப் பார்த்தவுடன்,  டெபுட்டி ஜெய்லர் & லைசனிங் ஆஃபீஸரை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் ‘ஜெயிலில் உள்ள கைதிகளின் அடிப்படை கல்வி மற்றும் வயதுக்கு ஏற்ப அவர்களை மேற்படிப்பு கூட படிக்க வைக்கிறார்கள் என்றும், நிறைய பேர் தொலைதூரக் கல்வியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றும், கைதிகள் அவர்கள் தண்டனைக் காலம் முடிந்து வெளியில் வந்தவுடன் இந்த சமுதாயத்தில் ஒன்றி அண்மைக்கால தொழில்நுட்பங்களை அப்டேட் செய்துகொண்டு வாழ்க்கையைத் தொடர தொழில்நுட்ப நூல்கள் தேவை என்றும்’ கூறினார்.

அவர்களின் தேவையை நான் முன்பே அறிந்திருந்தாலும் புத்தகக் காட்சி ஸ்டாலில் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றறியவே தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

உடனடியாக, ரூபாய் 15, 575/-  மதிப்புள்ள  கீழ்க்காணும் 11 தலைப்புகளில் 111 புத்தகங்களை சிறைச்சாலை நூலகங்களுக்கு ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை சார்பில் அன்பளிப்பாக கொடுக்க ஏற்பாடு செய்தோம்.

விரிவாக படிக்க…இங்கே கிளிக் செய்யவும்!

1.காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் – 3
2.பேஸ்புக் A-Z   – 3
3.ஐடி துறை இன்டரவியுவில்ஜெயிப்பது எப்படி – 3
4. எம்எஸ் ஆபீஸ் இங்கிலீஷ் – 3
5. கம்ப்யூட்டரில் தமிழ் – 20
6. திறமையை பட்டை தீட்டுங்கள் – 10
7. இப்படிக்கு அன்புடன் மனசு – 4
8. Blog நீங்களாகவே வடிவமைப்பது எப்படி – 10
9. C language English – 25
10.இவ்வளவுதான் கம்ப்யூட்டர் – 15
11.இவ்வளவுதான் இண்டர்நெட் – 15

இப்படியாக நான் எழுதிய தொழில்நுட்ப நூல்கள் சிறைச்சாலை நூலகங்களுக்குத் தயாராகி பலத்த பாதுகாப்புடன் புறப்பட்டன!

அனைவருக்கும் இனிய மகர சங்கராந்தி நல்வாழ்த்துகள்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜனவரி 14, 2023 | சனிக்கிழமை(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon