நல்லவனும், கெட்டவனும்!

நல்லவனும், கெட்டவனும்!

‘நான் ரொம்ப நல்லவன்பா, நேர்மையானவன்பா’ என்று அடிக்கடி நேரடியாகவும் மறைமுகமாகவும்
தானே சொல்லி வெளிப்படுத்திக் கொள்பவர்கள்
எத்தனைக்கு எத்தனை ஆபத்தானவர்களோ…

அத்தனைக்கு அத்தனை ஆபத்தானவர்கள்
‘நான் அவ்வளவு நல்லவன் இல்லைப்பா…’ என தன்னடக்கமாக சொல்லிக்கொள்பவர்கள்!

முன்னதில்
‘எவ்வளவு நல்லவர் இவர்’
என்ற பட்டம் கிடைப்பதற்கான முயற்சி!

பின்னதில்
‘என்ன ஒரு நேர்மையான மனிதர், யாரேனும் இப்படி தன்னை நல்லவன் இல்லை என்பார்களா?’
என்ற அங்கீகாரம்
கிடைப்பதற்கான யுக்தி!

முயற்சியோ, யுக்தியோ
இருசாராருமே மற்றவர்களுக்கு
false hope
கொடுப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்!

கவனம்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

ஜனவரி 11, 2023 | புதன்

(Visited 244 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon