சில நேரங்களில் சில அபத்தங்கள்!
அபத்தங்களில் எல்லாம்
மிகவும் அபத்தமானது
நமக்குப் பிடிப்பவர்கள்
எல்லோருக்கும்
நம்மைப் பிடிக்கும்
என எண்ணுவதுதான்!
அது அபத்தமாகவே
இருந்துவிட்டுப் போகட்டுமே
அதனால் ஒன்றும்
குறைந்துவிடப்
போவதில்லையே நாம்!
எத்தனைக்கு எத்தனை
நமக்குப் பிடிப்பவர்களின்
எண்ணிக்கை அதிகமாகிறதோ
அத்தனைக்கு அத்தனை
நம் மனம் அன்பால்
ரொம்பி வழிவது
சர்வ நிச்சயம்!
அதுவே
நம்மை
நம் செயல்பாட்டை
நம் உற்சாகத்தை
நம் ஓட்டத்தை
சரியான பாதையில்
துரிதப்படுத்தும்
என்பதில்
மாற்றுக்கருத்துக்கு
இடமே இல்லை!
மற்றவர்களுக்குப்
பிடிக்கிறதா இல்லையா
அந்த ஆராய்ச்சியெல்லாம்
செய்யாமல்
மற்றவர்களுக்கும்
நம்மைப் பிடிக்கும் என்ற
‘அபத்த’ சிந்தனையோடு
வாழ்வதும்
ஒருவிதத்தில்
நல்லதுதான்!
வாழ்க்கை
உயிர்ப்புடன் இருக்க
சில அபத்தங்கள்
தேவைதான்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜனவரி 27, 2023 | வெள்ளி
#காம்கேர்_கவிதை #compcare_kavithai