#கவிதை: நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்!

நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும்!

மகிழ்ச்சியாய் வாழ்வதைவிட
மகிழ்ச்சியாய் வாழ்கிறோம்
என்ற நினைப்பே
அதிக மகிழ்ச்சியாக இருக்கும்…

ருசியான விருந்தை
திருப்தியாக சாப்பிடுவதைவிட
அருமையான சாப்பாடு சாப்பிட்டோம்
என்ற நினைப்பே
அதிக திருப்தியாக இருக்கும்…

நாம் உடற்பயிற்சி செய்து
ஆரோக்கியமாக இருப்பதைவிட
நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம்
என்ற நினைப்பே
அதிக ஆரோக்கியமான
உணர்வைக் கொடுக்கும்…

அதுபோல் தான்
நாம் உண்மையில் கஷ்டப்படுவதைவிட
நாம் கஷ்டப்படுகிறோம்
என்ற நினைப்பே
அதிக கஷ்டத்தைக் கொடுக்கும்…

நல்லவற்றை
நினைத்துப் பார்த்தால்
அது இரட்டிப்பாக
இனிக்கும்….

கெட்டவற்றை
நினைத்துப் பார்த்தால்
அது மும்மடங்காகி
துன்புறுத்தும்…

எதை
நினைத்துப் பார்க்க வேண்டுமோ
அதை
நினைத்துப் பார்ப்போம்

எதை
தூக்கி எறிய வேண்டுமோ
அதை
தூக்கி எறிவோம்

எல்லாம்
நம் நினைப்பே!

நினைப்புதான்
பிழைப்பைக் கொடுக்கும்
(கெடுக்கும் அல்ல)

கவனம்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

பிப்ரவரி 17, 2023 | வெள்ளி

#காம்கேர்_கவிதை #compcare_kavithai

(Visited 510 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon