Communication makes the successful completion of any task!

Communication makes the successful completion of any task!

ஒரு சின்ன கருத்து வேறுபாட்டில் என்னை அதிகம் அறிந்திராத ஒருவர் என்னிடம் ‘நீங்கள் ரொம்ப சுயநலம். உங்களுக்குத் தேவை என்றால் நான்கு முறை அழைக்கிறீர்கள். இரண்டு முறை வாட்ஸ் அப்பில் நினைவூட்டுகிறீர்கள்…’ என்றார்.

இத்தனைக்கும் அவர் ஒன்றும் எனக்காக மலையைத் தூக்கி வைக்கும் உதவியை எல்லாம் செய்யவில்லை.

எனக்காக (ஒரு கிளையிண்ட்டாக) அவர் பணிபுரியும் இடத்தில் அவர் செய்ய வேண்டிய வேலையை (பணியை /கடமையை) அவரை செய்ய வைப்பதற்கு நான் போன் செய்ததையே ஏதோ பரோபகார சிந்தனையில் பேசியதை கேட்ட போது கொஞ்சமும் கோபம் வரவில்லை.

மாறாக நின்று நிதானித்து பதில் சொன்னேன்.

‘மேடம், இப்போதுதானே என்னை அறிகிறீர்கள் நீங்கள்… அதனால்தான் இப்படி சொல்கிறீர்கள்… எனக்குத் தேவை என்றால் 4 முறைதான் அழைக்கிறேன். நீங்கள் என்னிடம் உதவி கேட்டால் 10 முறை அழைத்திருப்பேன். அந்த உதவி உங்களுக்கு முறையாக சேரும் வரை ஃபாலோ அப் செய்துகொண்டே இருப்பேன்… போனில், வாட்ஸ் அப்பில், மெசஞ்சரில் இப்படி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்திருப்பேன். உங்களுடன் மட்டும் இல்லாமல், உங்களுக்கான அந்த வேலை நடந்து முடிக்க யார் யாரெல்லாம் அந்த செயினில் இருக்கிறார்களோ அவர்களுடமும்தான். ஒரு வேலை முழுமையாக நடந்து முடிக்க வேண்டுமானால் அதற்கு மிக முக்கியமாக தேவை ‘கம்யூனிகேஷன்’.

கம்ப்யூனிகேஷன்தான் வேலைகள் தொய்வில்லாமல் நடக்க உதவும் மிக முக்கியக் காரணி. அது நம் வீட்டு சமையலறையாக இருந்தாலும் சரி, ஐ.எஸ்.ஆர்.ஓ ஆராய்ச்சிக் கூடமாக இருந்தாலும் சரி.

Dress Makes the man என்பதைப் போல Communication is fuel for successful completion of any task.

அவர் என்ன நினைத்துக் கொண்டாரோ தெரியாது. ஆனால் ‘சரிதாங்க’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

பிப்ரவரி 13, 2023 | திங்கள்

(Visited 1,663 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon