நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது!
எழுத்தாளர் ஜெயகாந்தன் ’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ நாவலில் நாயகியின் காலை முடமாக்குவதாக காட்டியிருப்பதற்கு, ‘நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா?’ அதனால்தான் அப்படி கதையின் போக்கைக் கொண்டு சென்றேன் என்று அந்த நாவலின் முன்னுரையில் எழுதி இருப்பார்.
அந்த நாவலை முழுமையாகப் படித்திருப்பவர்களுக்கு அவர் என்ன கோணத்தில் சொல்லி இருப்பார் என்பது புரிந்திருக்கும்.
அவர் எந்த கோணத்தில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கட்டும்.
நாம் அதை இப்படி எடுத்துக்கொள்ளலாமே…
தோல்விகளால் மன உளைச்சலில் இருப்பவர்கள் ‘நெஞ்சு ஒடிவதைவிட கால் ஒடிவது குறைந்த விபத்தல்லவா?’ இந்த வாக்கியத்தை மனதில் கொண்டால் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வியை செல்லாக்காசாக்கிக் கொள்ளலாமே!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
பிப்ரவரி 3, 2023 | வெள்ளிக் கிழமை