அழுகை!
ஒரு சென்சிடிவான விவாதம் ஒன்றில் நான் பகிர்ந்து கொண்டது. அது என்ன விவாதம், அதன் முடிவு என்ன என்பதையெல்லாம் அதற்கு ஒரு முழு வடிவம் கிடைத்தவுடன் பகிர்கிறேன்.
இப்போதைக்கு நான் பகிர்ந்துகொண்ட “சிறு” விஷயத்தை மட்டும் சொல்கிறேன்.
பெண்கள் என்றால் தங்கள் சோகத்தை அழுது ஆர்பரித்துத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை.
அதுவும் பொறுப்பற்ற ஆண்கள் இருக்கும் ஒரு குடும்பத்தில் அல்லது உரிமையுள்ள ஆண்கள் இல்லாத குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் அல்லது பொறுப்பை ஏற்று வழிநடத்தும் குடும்பத்தில் உள்ள பெண்கள் தங்கள் பெற்றோர் அல்லது கணவன் அல்லது பிள்ளைகள் இறந்ததற்குக் கூட பெரிய அளவில் அழாமல் தங்கள் கடமையை சரியாக முடிப்பதில் மட்டுமே கவனமாக இருப்பார்கள்.
அழுகை துக்கம் எல்லாவற்றையும் எல்லாம் முடிந்த பிறகு தனிமையில் வெளிப்படுத்திக்கொள்வார்கள்.
இந்த நியதி பெண்களுக்கு மட்டும் அல்ல, பொறுப்பை ஏற்று வழி நடத்தும் ஆண்களும் இப்படித்தான் இருப்பார்கள். அதனால்தான் இறப்பு நடந்த வீட்டில் சம்மந்தப்பட்ட ஆண்கள் அத்தனை அழுவதில்லை. ஆனால், பெண்ணாக இருந்துவிட்டால் அவள் அழுகிறாளா, அழவில்லையா என பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கும்.
தலைமைப் பொறுப்பில் உள்ள ஆணோ, பெண்ணோ மகிழ்ச்சி அல்லது துக்கம் இரண்டையும் மண்டைக்குள்
ஏற்றிக் கொள்ளாமல் தள்ளி நின்றுதான் கொண்டாடுவார்கள்.
இந்த உளவியல் எதுவும் தெரியாமல், அவர் ஏன் சிரிக்கவில்லை, இவர் ஏன் அழவில்லை என அவர்களை பற்றி புரணி பேச வேண்டாமே!
– காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஏப்ரல் 11, 2023 | செவ்வாய்