உணவும், சுயகட்டுப்பாடும்!
காலை வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, காபி குடித்துவிட்டு லேப்டாப்பை ஆன் செய்தபடி வாட்ஸ் அப் பார்த்தேன். நேற்று இரவு 10.15 மணிக்கு ஒரு வாட்ஸ் அப் தகவல் இலக்கியாவிடம் இருந்து.
அவர் அனுப்பி இருந்த தகவல் மகிழ்ச்சியாக இருந்தது. இருக்காதா பின்னே? என் எழுத்து அவருக்குள் உண்டாக்கிய தன்னம்பிக்கையை அவர் உணர்ந்து எழுதி இருந்ததை அல்லவா அவர் மகிழ்ச்சியுடன் சொல்லி இருந்தார். இலக்கியா ரசித்த விஷயத்தை நீங்களும் https://compcarebhuvaneswari.com/?p=13977 இந்த லிங்கில் ரசிக்கலாம்.
யார் இந்த இலக்கியா?
என் முகநூல் நட்பு இணைப்பில் இருக்கும் திரு. கோபி சரபோஜி அவர்களின் மகள். இவர் பள்ளி இறுதி முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்.
திரு. கோபி சரபோஜி தன் மகள், மகன் இருவருடனும் தினமும் இரவு தூங்குவதற்கு முன் நாட்டு நடப்புகள் குறித்து பேசுவார். என் எழுத்துக்களை வாசித்து காண்பித்து அவை குறித்து விவாதிப்பார். இதையெல்லாம் அவரே பலமுறை என்னிடம் கூறியுள்ளார்.
இலக்கியா கல்லூரியில் சேர்வதற்கு முன்பே என்னிடம் தான் எடுக்க இருக்கும் அக்ரிகல்ச்சர் பிரிவு பற்றி ஆலோசனை கேட்டார். அது குறித்து பேசி முடித்ததும், ‘இனி ஹாஸ்டல் வாழ்க்கைதானே அல்லது யாரேனும் உறவினர்கள் இருக்கிறார்களா அந்த ஊரில்?’ என்றேன்.
‘ஹாஸ்டல்தான் ஆண்ட்டி’ என்றவருக்கு ஒரே ஒரு சிறிய குறிப்பை மட்டும் சொன்னேன். ‘படிப்பு முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் உன்னுடைய பாதுகாப்பு. உன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனமாக இருக்கவும். படிப்பு, திறமை, பாராட்டு, பரிசு, விருது இவை அத்தனையையும் தாங்கி நிற்கப் போவது உன் பாதுகாப்பான வாழ்க்கை முறை மட்டுமே!’ என்றேன்.
அவரும் ‘தேங்க்ஸ் ஆண்ட்டி, நிச்சயம் நான் கவனமாக இருப்பேன்’ என்று சொன்னார்.
இலக்கியாவும், இவரது தம்பியும் இவர்கள் 6-ஆம் வகுப்பு, 7-ம் வகுப்புப் படிக்கும் காலத்தில் இருந்தே இவர்கள் தந்தை திரு. கோபி சரபோஜி வாயிலாக என் எழுத்தின் வாயிலாக நான் சொல்லும் வாழ்வியலை உள்ளுக்குள் வாங்கி வளர்ந்து வருகிறார்கள் என்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. நான் வாழ்ந்து வரும் வாழ்க்கையை வாழ்வியலாக எழுதி வருகிறேன். அவ்வளவுதான். அதுவே இந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மிகப் பெரிய விஷயம்.
அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்தது:
Hi aunty.How are you?Today I and dad both are discussing food,liquor and different habits of people.To explain briefly,he gave me some examples of famous personalities like modiji,gandhiji etc.,By taking unknown persons as examples,I couldn’t believe some facts.So,he gave me you as known example.He shown me the post of your food habits in Malaysian conference.He explained very surprisingly about the nutritious food that u ate.Still he couldn’t believe “How can one manage the days only with these foods?”.It doesn’t make me surprise. I was surprised and attracted only towards one thing,that’s ur self control. Its not possible for everyone to be like that in a place with different varieties of food. All just think to taste and explore different varieties.Today I learnt about self control.Thanks for the indirect lesson.
iLakkiya!
தமிழாக்கம்:
‘வணக்கம் ஆண்ட்டி.எப்படி இருக்கீங்க? இன்று நானும் அப்பாவும் உணவு,மதுபானம் மற்றும் மனிதர்களின் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் பற்றி பேசுனோம். சுருக்கமாக விளக்க, மோடிஜி,காந்திஜி போன்ற பிரபலங்களின் சில உதாரணங்களை கொடுத்தார். தெரியாத நபர்களை உதாரணங்களாக எடுத்துக்கொண்டு, என்னால் அவற்றில் சில உண்மைகளை நம்ப முடியவில்லை. எனவே, அவர் உங்களை உதாரணமாக சொன்னார். மலேசியாவில் நடந்த மாநாட்டில் நீங்கள் கலந்துகொண்ட போது உங்களின் உணவுப் பழக்கம் பற்றி நீங்கள் எழுதிய பதிவை அவர் எனக்குக் காட்டினார். நீங்கள் சாப்பிட்ட சத்தான உணவைப் பற்றி மிகவும் ஆச்சரியமாக விளக்கினார். ஆனாலும் அவரால் நம்ப முடியவில்லை. ‘எப்படி இந்த உணவுகளால் மட்டுமே ஒருவரால் நாட்களை நிர்வகிக்க முடியுமா?’. இது எனக்கு ஆச்சரியமாக இல்லை. எனக்கு ஒரு விஷயத்தின் மீது மட்டும் ஆச்சரியமும் ஈர்ப்பும் ஏற்பட்டது, அதுதான் உங்களின் சுயக்கட்டுப்பாடு. பல்வேறு வகையான உணவுகள் உள்ள இடத்தில் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. எல்லோருக்குமே அவற்றை சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனால் உங்கள் சுயக்கட்டுப்பாடு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்று நான் சுய கட்டுப்பாடு பற்றி கற்றுக்கொண்டேன். மறைமுக பாடத்திற்கு நன்றி.
இப்படிக்கு
இலக்கியா!’
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
ComPcare Software
ஜூலை 2023