#வகுப்பல்ல_நிகழ்ச்சி
‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ என்ற நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கிய ஆரம்ப காலகட்டதில் ஒரு உரையாடல்:
ஏஐ விரும்பி ஒருவர்:
மேடம், நீங்கள் நடத்தும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ நிகழ்ச்சி தொடர்ச்சியாக 2-1/2 மணி நேரம் போட்டிருக்கிறீர்களே… கவனிக்க முடியுமா? போரடிக்காதா? புரியுமா?
நான்:
பொதுவாக ஒரு சினிமா என்பது கிட்டத்தட்ட 2 மணி முதல் 2-1/2 மணி நேரம் ஓடுகிறது. அதுவும் உங்கள் அபிமான நடிகர் / நடிகை எனும்போது போரடிக்கிறதா, தூக்கம் வருகிறதா? அதுபோல்தான் நாங்கள் நடத்தும் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ என்பதும் வகுப்பு அல்ல. நிகழ்ச்சி.
வகுப்பாக இருந்தால் 2-1/2 மணி நேரம் கவனிக்க முடியாது உள் வாங்க இயலாது. தூக்கம் வரலாம். போரடிக்கலாம். ஆனால் இது நிகழ்ச்சி. சுவாரஸ்யமான லைவ் உதாரணங்களுடன் ஏஐயின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக விளக்குவதால்… போரடிக்கும், தூக்கம் வரும் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
நிகழ்ச்சியில் நீங்கள் சேருங்கள். நீங்கள் சொல்வதைப் போல் தூக்கம் வந்தாலோ அல்லது போரடித்தாலோ கட்டணத்தை திருப்பி அளிக்கிறோம் என்றேன்.
அவரும் கலந்துகொண்டார். ஆனால் கட்டணம் என் Gpay ல் இருந்து அவரது gPay க்கு செல்லவே இல்லை.
பரஸ்பரம் மகிழ்ச்சி மட்டுமே என்னிடம் இருந்து அந்த ஏஐ விரும்பிக்கும், அவரிடம் இருந்து எங்கள் காம்கேருக்கும் பரிமாற்றமானது!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 14, 2023 | வியாழன்