#Ai: For Housemakers!

For HouseMakers!

ஏஐ நிகழ்ச்சியை இந்த வாரம் House Makers காக ஒதுக்கி இருந்தோம். அறிவிப்பு வெளியிட்ட ஓரிரு தினங்களுக்குள்ளேயே இந்த வார ஸ்லாட்டுக்கு டிமாண்ட் வந்துகொண்டே இருக்கிறது.

இதைப் பார்க்கப் பார்க்க மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பெண்கள் குறிப்பாக Home Makers / House Makers தங்கள் ஆர்வத்தை சீரியல்கள் பார்ப்பதில் மட்டும்தான் காட்டுகிறார்கள் என்ற ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. அதை உடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த வார ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ’ நிகழ்ச்சியை House Makers காக ஒதுக்கி இருந்தேன். சிலர் தயங்கி தயங்கித்தான் வாட்ஸ் அப்பில் நாங்கள் சேரலாமா? புரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்கள்.

பொதுவாக என் அலுவலக வாட்ஸ் அப் எண்களில் வரும் கேள்விகளுக்கு என் உதவியாளர்தான் பதில் அளிப்பார்.

இந்த வாரம் House Makers கான நிகழ்ச்சி என்பதால் நான் பேசினால் நன்றாக இருக்கும் என கருதி நிகழ்ச்சி குறித்து வந்திருந்த அத்தனை கேள்விகளுக்கும் நானே போனில் தொடர்பு கொண்டு பதில் அளித்தேன். அந்த அக்கறையினால் House Makers பலர் நம்பிக்கையுடன் நிகழ்ச்சியில் சேர்ந்துள்ளார்கள். அனைவரும் டிகிரி முடித்தவர்கள். 35 வயதில் இருந்து 45 வயதுவரை உள்ளார்கள். 60 வயதில் ஒரு பெண்மணி ‘நான் சேரலாமா, நான் வேலைக்குச் சென்று ஓய்வு பெற்றுள்ளேன்’ என கூறினார். ‘அதற்கென்ன சேரலாம். வயது ஒரு பொருட்டல்ல’ என்றேன். அடுத்த நொடி கூகுள் பே செய்துவிட்டார்.

அது சரி, House Makers க்கு ஏஐ அவசியமா என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றலாம்.

இப்படித்தான் ஒரு காலத்தில் கம்ப்யூட்டர் என்பது படித்து பட்டம் பெற்றவர்களுக்கு மட்டும், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு மட்டும் என்றெல்லாம் கருதினார்கள்.

இப்போது ஏஐ என்பது ஏதோ இளைஞர்களுக்கானது, படிக்கும் மாணவர்களுக்கானது என்ற மாயையான கருத்து நிலவுகிறது.

தொழில்நுட்பம் எப்படி மனிதர்கள் அனைவருக்கும் தேவையோ, அப்படித்தான் ஏஐயும் இனி வரும் காலத்தில் அனைவருக்கும் தேவை. காரணம், ஏஐ என்பது தொழில்நுட்பத்தில் ஓர் அங்கமே. எல்லோருமே அதன் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

அதைத்தான் நாங்கள் ‘மிரட்டும் மெட்டாவெர்ஸ், அசத்தும் ஏஐ: இனி நடக்கப் போவது என்ன?’ என்ற நிகழ்ச்சி மூலம் நடத்துகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழில் பேசுவதை புரிந்துகொள்ளவும், தமிழில் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. வாட்ஸ் அப்: 9444949921

அனைவருக்கும் வாழ்த்துகள்!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 13, 2023 | புதன் கிழமை

(Visited 328 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon