தொழில்நுட்ப முன்னோடி!
நான் அடிக்கடி சொல்வதுதான். குழந்தைகளுக்கு / இளைஞர்களுக்கு சில நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுக்கும்போது, அதை 100 சதவிகிதம் அப்படியே விதிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தாமல் அப்படியே அவர்கள் போக்கில் விட்டுவிட்டால் நாளடைவில் அவர்களே அந்த விதிமுறைகளுக்குள் வந்துவிடுவார்கள்.
உதாரணத்துக்கு, இளைஞர்களுக்கு வாக்கிங் செல்ல ஆலோசனை சொல்லும்போதே பாட்டு கேட்டுக்கொண்டு செல்லக் கூடாது, பேசிக் கொண்டு செல்லக் கூடாது, அரட்டை அடித்துக்கொண்டு செல்லக் கூடாது என ஏராளமான அறிவுரைகளை அள்ளி வீசினால் அவர்கள் வாக்கிங்கே செல்ல மாட்டார்கள்.
மாறாக அவர்களுக்கு ஆலோசனை சொல்லி அதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு ஒதுங்கி நின்றால் முதலில் பாட்டு கேட்டபடி, பேசியபடி வாக்கிங் செல்ல ஆரம்பித்து மெல்ல மெல்ல அவர்களே அவர்களுக்கான நியாயமான விதிமுறைகளுக்குள் வந்துவிடுவார்கள்.
சென்ற வாரம் அப்படித்தான் ஒரு பள்ளி மாணவ மாணவிகளுக்காக (+1, +2) ஏஐ மெட்டாவெர்ஸ் நிகழ்ச்சி நடத்தினோம்.
அந்தப் பள்ளி ஆசிரியர் போன் செய்து ‘எங்க பிள்ளைங்களுக்கு ஏஐ ஆர்வத்தைத் தூண்டி விட்டீர்கள். இனி அதில் என்ன படிக்கணும், +2 படித்த பிறகு ஏஐ மெட்டாவெர்ஸ் குறித்து என்ன பட்டப்படிப்புப் படிக்கலாம் என்று உங்களிடம்தான் ஆலோசனை கேட்கப் போகிறோம் என்கிறார்கள். அவர்களுக்கு தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை நீங்கள்தான் மேடம் குரு’ என்று தகவல் சொன்னார்.
இதைவிட வேறென்ன பெரிதாக பரிசு கொடுத்துவிட முடியும் அந்தக் குழந்தைகள்?
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், எந்த ஒரு விஷயத்துக்கும் நாம் ஆர்வத்தை தூண்டிவிட்டால் போதும், ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களே கற்றுக்கொள்ளும் வழிகளையும் விதிமுறைகளையும் தேடிச் செல்வார்கள்.
நீங்களும் ஏஐ குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமா அல்லது உங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டுமா? 9444949921 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.
நன்றி
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
செப்டம்பர் 1, 2023 | வெள்ளி