எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் பல வருடங்களாகவே Ai குறித்த ஆராய்ச்சிப் பணிகளை செய்து வருகிறது.
டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நம் கம்ப்யூட்டர்கள் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே C மொழி மூலம் அனிமேஷன் கார்ட்டூன்களை உருவாக்கி இருக்கிறோம்.
அதைத் தொடர்ந்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமான பிறகு அனிமேஷன் சாஃப்ட்வேர்களை உருவாக்கி அனிமேஷனில் ஓவியங்கள் வரைந்து அவற்றை பேச வைத்தோம். போலவே புகைப்படங்களையும் பேச வைத்திருக்கிறோம். கல்வி சார்ந்த ப்ராஜெக்ட்டுகளில் இந்த நுணுக்கங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி பல பல்கலைக்கழக பாடத்திட்டங்களை அனிமேஷன் மூலம் தயாரித்து வழங்கி இருக்கிறோம்.
எங்களைப் பொருத்த வரை அனிமேஷனின் நீட்சிதான் (Extension) Ai.
அனிமேஷன் காலத்திலேயே எழுத்தாளர்களின் குரலை மாடல் எடுத்து அவரவரது புத்தகங்களை எல்லாம் அவரவரது குரலிலேயே வாசிக்க முயற்சிகள் எடுத்துள்ளோம்.
அதே தொழில்நுட்பத்தைத்தான், இன்று Ai மூலம் புகைப்படங்களை பேச வைப்பது, மனித உருவங்களுக்கு மாடல்களை வடிவமைப்பது, மனிதக் குரல்களுக்கு மாடல்களை உருவாக்குவது என செய்து வருகிறோம்.
நேற்று முதல் விஜயதசமி வாழ்த்துக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிக்கப்பட்ட Ai மாடல் என்ற தலைப்புடன் ஒரு Ai புகைப்பட / ஓவிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றுகிறது.
ஆனால் நாங்கள் விநாயகர் சதுர்த்தி அன்றே, அதாவது செப்டம்பர் 18, 2023 அன்றே, Ai மாடல் மூலம் விநாயகர் சதுர்த்தி வாழ்த்தை தெரிவித்திருந்தோம்.
அந்த வகையில் முதன் முதலில் Ai மாடல் மூலம் வாழ்த்துத் தெரிவித்தது எங்கள் காம்கேரும், நானும் தானே. அதற்கு மாடல் உருவமும் நானே, குரலும் நானே. என் புகைப்படத்தை அடிப்படையாக வைத்து Ai மூலம் Ai புவனேஸ்வரியை உருவாக்கினோம். என் குரலின் மாடலை வைத்துப் பின்னணி குரலும் கொடுத்தோம்.
அதனால்தான் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துத் தெரிவித்த Ai வீடியோவில் இந்தியாவில் முதன் முதலில் Ai மூலம் வாழ்த்துத் தெரிவித்த முதல் Ai மாடல் என்று குறிப்பிட்டு திரும்பவும் பதிவு செய்துள்ளேன்.
இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால், எங்களுக்குத் தெரிந்தவரை இந்தியாவில் முதன் முதலில் Ai மூலம் பண்டிகை தின (விநாயகர் சதுர்த்தி) நல்வாழ்த்துகளை தெரிவித்தது காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், காம்கேர் புவனேஸ்வரியுமே.
குறிப்பு: செப்டம்பர் 2023 க்கு முன்பே இதுபோல பண்டிகை தின வாழ்த்தை Ai மூலம் யாரேனும் பதிவு செய்திருந்தால் அதற்கான சாட்சியுடன் இங்கு கமெண்ட்டில் பதிவு செய்யலாம். பொருத்தமில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்.
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
அக்டோபர் 25, 2023 | புதன்