வானொலி செய்தி வாசிப்பாளரின் பார்வையில்
அசத்தும் Ai – Part1, இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்
புத்தகத் தொடர்புக்கு : 9444949921
திருமிகு. ஸ்ரீகாந்த், திருச்சி
திருச்சி அகில இந்திய வானொலி செய்தி வாசிப்பாளர்!
செயற்கை நுண்ணறிவு AI பற்றி எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள நூல்கள். இந்த இரண்டு புத்தகங்களின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் க்யூ ஆர் கோடு மூலம் இவரின் அவ்தார் அதை விவரிப்பது தனிச்சிறப்பு. தமிழ்ப்பதிப்பக உலகில் இதுவே முதன் முயற்சி. சாதனை.
கணினி வந்த காலத்தில் வேலை வாய்ப்பு பறிபோகுமோ என பயந்தாலும் அது போல் ஏதும் நடக்கவில்லை, அதே போல் இப்போதும் பயமில்லை என்கிறார்.
எதுவும் மனிதன் கையில் வரும் போதுதான் செயற்கை ஆகிறது. அவன் தன் கையில் கிடைப்பதை இன்னும் எப்படி மேம்படுத்தி உபயோகிப்பது என யோசிப்பதாகக் கூறுகிறார்.
சாட் ஜிபிடி, BARD பற்றி எல்லாம் சொன்னதுடன் , இதில் வரும் ஒயிட் பாக்ஸ், ப்ளாக் பாக்ஸ் பற்றி சுவாரஸ்யமாய் சொல்கிறார். .
ஒயிட் பாக்ஸ் – சொன்னதைச் செய்வது. ப்ளாக் பாக்ஸ் – சொல்லாததையும் செய்வது.
கம்ப்யூட்டர் A to Z புத்தகம் விகடன் பிரசுரம் வெளியான காலத்தில் எழுத்தின் மூலம் அறிமுகம் ஆன இவர் தொழில் நுட்ப ரீதியாக 250க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1992ம் ஆண்டே இத்துறையில் நிறுவனம் தொடங்கிய முதல் பெண்மணி 32 ஆண்டுகளாக சாதித்து வருபவர்.
வாழ்த்துகள்!
ஸ்ரீகாந்த், திருச்சி
மார்ச் 24, 2024 | ஞாயிறு