அறம் வளர்ப்போம் – நினைத்ததை நடத்திக் கொடுக்கும் பிரபஞ்சம்!
நாம் ஒரு நல்ல விஷயத்தை மனதால் ஆழமாக விரும்பினால் செயல்படுத்த நினைத்தால், அந்த எண்ணம் காற்றில் கலந்து அது செயல் வடிவம் ஆகும் தருணத்துடன் ஒருங்கிணைந்து என்றேனும் ஒரு நாள் நாம் நினைத்ததை நடத்திக் கொடுக்கும் ஆற்றல் இந்த பிரபஞ்சத்துக்கு உண்டு.
என் வாழ்க்கையில் நான் நினைப்பதில் பெரும்பாலும் அப்படித்தான் செயல்வடிவம் பெற்றிருக்கின்றன.
இப்போதும் அப்படியான ஒரு அழகிய தருணம் ஏற்பட்டுள்ளது. 2019, 2020 ஆம் ஆண்டு பள்ளி குழந்தைகளுக்காக 1 முதல் 3 -ம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியருக்கு அறநெறியை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ‘அறம் வளர்ப்போம்’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி அதை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக மட்டும் நடத்தும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அப்போது தினமும் ஒரு அற(ம்)வார்த்தை, அதற்கு மூன்று வரிகளில் புரியும் வகையில் எளிய தமிழில் பொருள் கொடுத்திருப்பேன். ஆசிரியர்களும், பெற்றோர்களும் அதை மாடலாக எடுத்துக்கொண்டு அவர்கள் பாணியில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம்.
தினமும் காலை ’டாண்’ என்று ஆறு மணிக்கு பதிவிட்டு வந்தேன். ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அதை சொல்லிக் கொடுத்து வந்தார்கள்.
இது குழந்தைகளுக்கு மட்டும் இல்லாமல் ஆசிரியர்களுக்கும் கற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது என பாராட்டினார்கள். அதனால் நான் எழுதிவந்த ‘அறம் வளர்ப்போம்’ கருத்துக்களை ஆசிரியர்கள் +2 மாணவ மாணவிகள் வரை எடுத்துச் சென்றார்கள்.
வாய்ப்பிருந்தவர்கள் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி பெற்று, அவற்றை வீடியோவாகவும் எனக்கு பகிர ஆரம்பித்தார்கள்.
திருக்குறள் இரண்டடி, நாலடியார் நான்கடி போல காம்கேர் புவனேஸ்வரியின் ‘அறம் வளர்ப்போம்’ மூன்றடி என உண்மையிலேயே மனதார பாராட்டி மகிழ்ந்தார்கள் பள்ளி ஆசிரியர்கள்.
இப்படி எல்லாம் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களிடம் இருந்து பாராட்டை பெறுவது இறை அருள் இன்றி வேறென்னவாக இருக்க முடியும். இயற்கையும், இறைவனும் துணை நின்றால் நம் திறமைகளை முழுமையாக வெளிக்கொணர முடியும்.
எனது ’அறம் வளர்ப்போம்’ கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதை புத்தகமாகவும் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும் என தோன்றியது. ஆசிரியர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்தது.
ஆனால், குழந்தைகளுக்கான நூலாக இருப்பதால் வண்ணமயமாக கலர் பிரிண்ட்டில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் பொறுத்திருந்தேன்.
என்னுடைய எண்ணம் காற்றில் கலந்து அதை செயல்வடிவமாக்குவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டு, சமீபத்தில் திருநெல்வேலியில் இருந்து ஒரு அழைப்பு.
பள்ளிக் குழந்தைகளுக்கு, குறிப்பாக 1-3 வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசாகக் கொடுப்பதற்காக ஏதேனும் நூல்கள் இருக்கிறதா என கேட்க, என் மனதுக்குள் தோன்றிய ஒரே தலைப்பு ‘அறம் வளர்ப்போம்’ .
இதோ தயாராகி விட்டது ‘அறம் வளர்ப்போம்’ முழுக்க முழுக்க கலர் பிரிண்ட்டில்.
இதை தங்கள் குழந்தைகளுக்கும் வாங்கிக் கொடுக்க விரும்புபவர்கள் வாட்ஸ் அப் செய்தால் விவரம் கொடுக்கிறோம். 9444949921.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
மே 28, 2024 | செவ்வாய்