Reading Ride: அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்!

அறம் வளர்க்கும் 83 வயது பெரியவர்!

இந்த புகைப்படத்தில் இருக்கும் திரு கல்யாண சுந்தரம் (83+) அவர்கள் திருநெல்வேலியில் ஒரு சிறு கிராமத்தில் (குக் கிராமம்) வசித்து வருகிறார். அங்கு கொரியர் அனுப்ப வேண்டும் என்றால் கூட அவர்கள் ஊருக்கு ஏதேனும் கொரியர் கொடுக்க ஆட்கள் வரும்வரை காத்திருக்க வேண்டும். ஏன் என்றால் ஊரில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம். அப்படி கொரியர் கொடுக்க வரும் ஆட்களிடம் தான் இவர் தான் அனுப்ப வேண்டிய கொரியரை கொடுத்தனுப்புவாராம்.

அதுபோல கொரியரில் பார்சல் ஏதேனும் அனுப்பினாலும் அடுத்த நாளோ அல்லது அதற்கடுத்த நாளோ செல்லாது. அந்த ஊருக்கு வருகின்ற கொரியர்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அந்த கிராமத்துக்கு டெலிவரி செய்வார்களாம்.

அப்படித்தான் ‘அறம் வளர்ப்போம்’ நூலை இவர்களுக்கு அனுப்பிவிட்டு நானும் ஒரு வார காலம் காத்திருந்தேன்.

இப்படியான சூழலில் வசித்து வந்தாலும் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வமும், பரிசளிக்கும் ஆர்வமும் இவரிடம் குறையவே இல்லை.

நான் எழுதிய 14 நூல் தலைப்புகளை 1 முதல் 12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குப் பரிசளிக்க வாங்கியுள்ளார்.

வாங்கி அப்படியே பரிசளிக்கவில்லை. வாங்கி முதலில் தான் வாசித்துப் பார்த்து பின்னர் அதில் இருந்து கூடுதல் பிரதிகளை வாங்கினார். என்ன ஒரு செயல் நேர்த்தி!

இப்படியாக, நான் எழுதிய ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற நூலின் 100 பிரதிகளையும், ‘அறம் வளர்ப்போம்’ நூலின் 10 பிரதிகளையும் வாங்கியுள்ளார்.

மற்ற நூல்களை வாசித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் ஆர்டர் கொடுக்கிறேன் என இளைஞரைப் போன்ற துடிப்புடன் மகிழ்ச்சியுடன் பேசினார்.

கொரியரில் புத்தகங்கள் வந்துவிட்டன என என்னிடம் போனில் பேசும்போது (கொரியர் வந்ததா, வந்ததா என நான் விசாரிப்பேன்) மற்ற நாட்களில் பேசுவதை விட அதிக உற்சாகம் தெரியும்.

இவர் வாங்கிய  புத்தகங்கள் வகுப்பு வாரியாக!

1. வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் (College Students)
2. படித்த வேலையா, பிடித்த வேலையா? (College Students)
3. காலேஜ் ப்ராஜெக்ட் (College Students)
4. கனவு மெய்ப்பட (College Students)
5. அசத்தும் Ai – Part1 (+1 & +2 Students)
6. அசத்தும் Ai – Part2 (இனி எல்லாம் மெட்டாவெர்ஸ்) (+1 & +2 Students)
7. ப்ளாக் நீங்களாகவே வடிவமைப்பது எப்படி? (10th Students)
8. கம்ப்யூட்டரில் தமிழ் (9th Students)
9. வாழ்க்கையின் அப்லோடும் டவுன்லோடும் (8th Students)
10. வாழ்க்கையின் OTP (7th Students)
11. குழந்தைகள் உலகில் பெற்றோருக்கான பாஸ்வேர்ட் (6th Students)
12. திறமையை பட்டை தீட்டுங்கள் (5th Students)
13. இப்படிக்கு அன்புடன் மனசு (4th Students)
14. அறம் வளர்ப்போம் – (Lkg, UKg, 1st,2nd,3rd Students)

புத்தகத் தேவைக்கு வாட்ஸ் அப்: 9444949921

அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare K Bhuvaneswari
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 17, 2024 | திங்கள்

(Visited 1,027 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon