விநோத வாசகர்!
நேற்று ‘ஸ்மார்ட் போனில் சூப்பர் உலகம்’ புத்தகத்தை வாசித்த ஒரு வாசக அன்பர் (60+) சற்றே ஆதங்கத்துடன் நீங்கள் வாட்ஸ் அப் எப்படி உருவாக்குவது என அதில் எழுதவே இல்லை என்றார்.
‘இருக்கிறது சார்… பாருங்கள்…’
‘எத்தனையாவது பக்கத்தில்? சொல்லுங்களேன்… கொஞ்சம் சிரமம் பார்க்காமல்…’
‘நீங்கள் அந்த நூல் முழுவதையும் படித்து விட்டீர்களா?’ என்றேன்.
‘நான் அந்த நூலை வாங்கி 6 மாதம் ஆகிறது. ஆனால் படிக்கவே ஆரம்பிக்கவில்லை….’
‘படிக்காமலேயே வாட்ஸ் அப் பற்றி எழுதவே இல்லை என்கிறீர்களே…’
‘படிக்கிறேன் மேடம், ஆனால் பொருளடக்கத்தில் எழுதாததால் கேட்கிறேன்… பொருளடக்கத்தில் ‘வாட்ஸ் அப்’ என சொல்லி இருந்தால் நான் தேடி எடுத்து படித்திருப்பேன்…’
‘சார், அந்த நூல் என் கையில் இல்லை இப்போது. நான் ஒரு வேலையாக இருக்கிறேன்… புத்தகத்தை முழுதாக படியுங்கள். நான் கலைச் சொல்றகளை கூட பயன்படுத்திவதில்லை. தொழில்நுட்ப வார்த்தைகளை அப்படியே தமிழில்தான் எழுதுகிறேன்…. புத்தகத்தை முழுமையாக படித்த பிறகும் உங்கள் சந்தேகம் தீரவில்லை என்றால் இமெயில் செய்யுங்கள். பதில் அளிக்கிறேன்’ என சொல்லி முடித்தேன்.
WhatsAPP ஐ வாட்ஸ் அப் என்று நேரடியாக அழகாக எழுதும்போதே இப்படி குறைபடுகிறாரே, ‘பகிரி, ‘புலனம்’, ‘கட்செவி அஞ்சல்’ என்றெல்லாம் எழுதி இருந்தால் என்ன சொல்லி இருப்பார். கடுஞ்சொல் கொண்டு ஏசி இருப்பாரோ?
தொழில்நுட்ப வார்த்தைகளை நேரடியாக பயன்படுத்தும்போதுதான் அவர்கள் தொழில்நுட்பத் துறையில் பணிக்கு வரும்போது கஷ்டப்படாமல் இருப்பார்கள்.
ஏன் எனில் அவர்கள் பணி செய்யப் போவது உலகளாவிய நிறுவனங்களில். அங்கு பொதுமொழியாக பயன்படுவது ஆங்கிலம் மட்டுமே.
எங்கள் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் தமிழ் மீடியத்தில் படித்து விட்டு வந்தவர்கள் கஷ்டப்படுவதை நேரடியாக கடந்த 30 வருடங்களாக பார்த்து வருவதால் உண்மையை உரக்கச் சொல்கிறேன்.
திரும்பவும் சொல்கிறேன், தமிழ் மீடியத்தில் படிப்பது தவறே இல்லை. ஆனால் தொழில்நுட்ப வார்த்தைகள், நிறுவனங்களில் பெயர்கள், ஆப் மற்றும் சாஃப்ட்வேர்களின் பெயர்களை எல்லாம் கலைச் சொற்கள் என சொல்லி தமிழ்படுத்துவது பெரும் சிரமத்தையே உண்டு செய்யும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare K Bhuvaneswari
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 22, 2024 | சனிக்கிழமை