மற்றவர்களையும் முன்னேற்றத் தூண்டும் எண்ணம்!
ஒரு புத்தகம், ஒருவரது எழுத்து இதையெல்லாம் செய்யுமா என திரும்பவும் என்னை வியக்க வைத்த நான் எழுதிய நூலின் வாசக அன்பர் ஒருவரது இமெயில் இன்றைய மதியத்தை உற்சாகப்படுத்தியது.
அன்புள்ள புவனேஸ்வரி அம்மா அவர்களுக்கு,
அம்மா எனது பெயர் தினகரன். சி. உங்களது எழுத்தில் உருவான புத்தகமான திறமையை பட்டை தீட்டுங்கள் புத்தகத்தை இன்று தான் படித்து முடித்தேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு சிறு பிள்ளையில் இருந்தே கேட்டரிங் படிக்க வேண்டும் என்பதை ஆசையாக இருந்தது. ஆனால் எங்கள் வீட்டில் ‘சமையல் வேலைக்கா படிக்க போற’ என்று கேலி கிண்டல் செய்ய என்னை படிக்க விடாமல் செய்து விட்டனர். ஆனால் என்னால் இருந்து வெளியே வர முடியவில்லை. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று எனக்கு ரொம்ப வெறி. ஏன் என்றால் எங்கள் குடும்பத்தில் நெறைய பேர் முயற்சி செய்தும் யாராலும் தொழில் செய்ய முடியவில்லை. பிறகு நான் தொழில் ஆரம்பித்தேன். நன்றாக போய் கொண்டு இருந்த நிலையில் என் கவனம் வேறொரு பக்கம் சென்று விட்டது. அதனால் நான் எனது நேசித்த தொழிலை இழந்து விட்டேன். மனம் உளைச்சல், கடன், பிரச்சனை இப்படி பல. நான் இப்போது சிங்கப்பூரில் வேலைக்கு வந்துவிட்டேன். பல பேர் மீது கோவம். இந்த சமுதாயத்தின் மீதும் மிகவும் கோவம். என்ன செய்வது என்று தெரியவில்லை. என் கம்பெனில் புக் படிக்கும் வசதி இருக்கு அப்போதுதான் உங்கள் புத்தகம் (திறமையை பட்டை தீட்டுங்கள்) படித்தேன்.
அப்போதுதான் எனக்கு தெரிந்தது. தவறு வேறு யாரிடமும் இல்லை என் மீது தான் உள்ளது என்று பல விஷயங்களை உங்கள் புத்தகங்களில் இருந்து நான் கற்றுக் கொண்டேன். நான் எனது தொழிலை விட்டுவிட்டு வந்து வெளிநாட்டில் வேலை செய்தாலும் என் சிந்தனை முழுக்க என் தொழில் மீதுதான் இருந்து கொண்டிருக்கிறது. நீங்கள் எழுதியிருக்கும் இந்த புத்தகத்தின் வாயிலாக நான் நிறைய விஷயங்களை எனக்குள் நான் சொல்லிக் கொண்டேன். திரும்பவும் நான் சென்று என் வாழ்வில் முன்னேற, நீங்களும் ஒரு காரணம். அதற்கு நன்றி சொல்லும் வாயிலாகவே உங்களுக்கு இந்த செய்தியை நான் அனுப்புகிறேன். கண்டிப்பாக திறமையை பட்டை தீட்டுவேன். மற்றவர்களை முன்னேற்றுவேன்.
நன்றி
உங்கள் அன்புள்ள
தினகரன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
Compcare K Bhuvaneswari
காம்கேர் கே. புவனேஸ்வரி, Founder & CEO
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூன் 23, 2024 | ஞாயிறு