Meta Ai, நான் யார் சொல்!
வாட்ஸ் அப்பிலும், மெசஞ்சரிலும் Meta Ai வந்த பிறகு முதன் முதலில் அதனிடம் கேட்கப்படும் கேள்வி 90% என்னவாக இருக்கிறது தெரியுமா?
அவரவர்கள் பெயரை கொடுத்து ‘இது யார்? இவரைப் பற்றி சொல்’ என்பதாகவே இருக்கிறது.
மனிதர்களுக்கு தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியமாக இருக்கிறது. அந்த மற்றவர்களில் Meta Ai ம் சேர்ந்துள்ளது இப்போது. Ai நம்மைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில்தான் எத்தனை ஆர்வம்?
இப்போதைக்கு Meta Ai (குறிப்பாக வாட்ஸ் அப் & மெசஞ்சர் வெர்ஷனில்) வெப்சைட்டுகளில் இருந்து தகவல்களை சேகரித்துக் கொடுக்கிறது. நிறைய பேர் பயன்படுத்தப் பயன்படுத்த அதற்கும் மொழி பிடிபடும், Ai காக எழுதப்படும் லாஜிக்குகளும் மேம்படுத்தப்பட்டு இன்னும் சூட்சுமமாம நம்முடன் உரையாடும், நாம் சொல்வதை புரிந்து கொள்ளும். அருமையாக நாம் கேட்பவற்றை செய்தும் கொடுக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக நாமும் Ai உடன் கைகோர்த்துப் பயணிப்போம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
காம்கேர் சாஃப்ட்வேர்
ஜூலை 3, 2024 | புதன்