ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் பார்வையில் – ‘விகே (எ) விக்டரி கிங்’ (மார்ச் 13, 2026)

உலகிலேயே முதல் முதலில் Ai-ல் தயாரிக்கப்பட்ட சுயசரிதை  ‘விகே (எ) விக்டரி கிங்’ குறித்து ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ் அவர்களின் கருத்து! 

‘விகே (எ) விக்டரி கிங்’ என்ற ஆட்டோபயோகிராஃபி காம்கேர் கே. புவனேஸ்வரி அவர்களின் தந்தையின் வாழ்க்கை வரலாற்று படைப்பு. முழுக்க முழுக்க Ai தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இவர் தன் பெற்றோர் மீது வைத்திருக்கும் அதீத அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Ai தொழில்நுட்பத்தில் இத்தனை பெரிய வீடியோவை நான் பார்த்தது இதுவே முதல்முறை. இத்தனைக்கும் இது ஒரு பகுதி தான்; இன்னும் 20 பகுதிகள் இருக்கின்றன என்பதை அறியும்போது தொழில்நுட்பத்தில் காம்கேர் கே. புவனேஸ்வரிக்கு இருக்கும் நிபுணத்துவத்தையும் அவர்களின் உழைப்பையும் எண்ணி வியக்கிறேன்.

அவர் கூறியது போல் இது ஒரு புதிய கான்செப்ட். எனவே இதுபோன்று இனி பலரும் முயல்வார்கள். அதோடு, இதற்கு என்று தனி மார்க்கெட் உருவாகவும் வாய்ப்பு உள்ளது.

வீடியோவில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. கடல், காடு என்று பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. படைப்பு பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் சுவாரஸ்யமாகவும் கவித்துவமாகவும் உள்ளது.

இவரது இந்த புதுமையான படைப்பு, சரியான நபர்களால் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று ஆழமாக விரும்புகிறேன்.

நன்றி!

– ஊடகவியலாளர் திரு. பால. மோகன்தாஸ்

(Visited 1,559 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon