ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்! (மார்ச் 9, 2026)

ஏஐ ஆராய்ச்சிகளுக்கு மணிமகுடம்!

09-03-2026, திங்கள் அன்று சென்னை ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் Swadeshi Shodh Sansthan – Tamil Nadu Chapter சார்பாக என்னுடைய 33 வருட ஏஐ ஆராய்ச்சிகளை கெளரவிக்கும் விதமாக Ai Excellence Award வழங்கினார்கள்.

ஐஐடி டைரக்டர் டாக்டர் காமகோடி அவர்கள் வருவதற்கு தாமதமாகியதால் மற்றொரு சிறப்பு விருந்தினர் திரு ஐயப்பன் ராமமூர்த்தி (Simens Digital Industries Software) அவர்கள் விருது வழங்கி சிறப்பித்தார். என்னுடன் சேர்த்து வெவ்வேறு துறைகளில் Ai பயன்படுத்தும் 10 சாதனைப் பெண்களுக்கும் விருது வழங்கினார்கள்.

டாக்டர் காமகோடி அவர்கள் வருகைக்காக காத்திருக்கும் நேரத்தில் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் Ai -ன் சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற சாஃப்ட்வேர்களை பயன்படுத்துவது எப்படி என பேசினார்கள்.

நான் இப்போதெல்லாம் மனதுக்குள் சுமந்து செல்லும் அப்பா அம்மாவின் ஆட்டோபயோகிராஃபியின் சிறு பகுதியை போட்டுக் காண்பிக்கலாம் என்ற நோக்கத்தில் அவர்களிடம் கேட்டு சில நிமிடங்கள் போட்டுக் காண்பித்தேன்.

இதற்குள் டாக்டர் காமகோடி அவர்கள் ஆன்லைனில் பேசுவதற்காக வந்துவிட்டதால் (நேரில் வர இயலாத கட்டாய அலுவலகச் சூழல் காரணமாக) பார்வையாளர்கள் கைத்தட்டலோடு மேடையை விட்டு கீழ் இறங்கினேன்.

ஆட்டோபயோகிராஃபி முழுவதையும் ஏஐ தொழில்நுட்பத்திலேயே செய்திருப்பதை பதிவு செய்தேன்.

நிகழ்ச்சி முடிந்ததும் பார்வையாளர்கள் என்னைப் பாராட்டியதோடு, என் பெற்றோரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள்.

இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, நிறுவனர்
Compcare K Bhuvaneswari
காம்கேர் சாஃப்ட்வேர்
Compcare Software
மார்ச் 9, 2026 | திங்கள்

(Visited 5,130 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon