சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை ஒட்டி,
விவேகானந்தரின் பொன்மொழிகள் மற்றும் அறிவுரைகளின் அடிப்படையில்
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக,
காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனமும், ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து
சிறப்புக் கட்டுரைப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம்.
இந்தப் போட்டியில், சென்னை, மயிலாப்பூர்
ராமகிருஷ்ணா மிஷன் உறைவிடஉயர்நிலைப் பள்ளி மாணவர்களும்,
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
அந்த மாணவர்களின் கட்டுரைகளை www.vivekanandam150.com வெப்சைட்டில் தொடர்ந்து வெளியிட்டோம்.
ஜனவரி 11, 2014, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு
சென்னை மயிலாப்பூர் சர்.பி.எஸ்.சிவசாமி சாலையில்(விவேகானந்தா கல்லூரி அருகில்)
இயங்கி வரும் ராமகிருஷ்ணா மிஷனில்
‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு
‘ஸ்ரீபத்மகிருஷ்’ விருதும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
முத்தாய்ப்பாக, ‘கம்ப்யூட்டரில் தமிழ் சொல்லாக்கம் – சாஃப்ட்வேர் தயாரிப்புகள்’ குறித்து
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO, காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடட்
மற்றும்
முனைவர் திரு. அர. ஜெயசந்திரன், சென்னை மாநிலக் கல்லூரி,
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் (Visually Impaired Person)
இணைந்து நடத்தும் சிறப்பு செயல்முறைக் கருத்தரங்கமும் நடைபெற்றது.