ஷெண்பா – இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2016 – ம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில். இவர் கல்லூரி படிக்கின்ற நாள் முதலாக என்னை பரிட்சியம் என்றும், ஜெயா டிவி, பொதிகை டிவிக்களில் நான் நடத்திவந்த தொழில்நுட்பத் தொடர்களை நிறைய பார்த்திருப்பதாகவும் அறிமுகம் செய்துகொண்டு நீண்ட நாட்கள் பழகியதைப் போல என்னுடன் பேசியது இவரது பண்பை உயர்த்தியது. இவருக்கு எழுத்தின் மீதான ஆர்வம் எனக்கு வியப்பளித்தது. எழுத்து மட்டுமில்லாமல் ஓவியத்திலும் வல்லவராக இருக்கிறார். இவரது நண்பர் விஜயபானுவும் இணைந்து அமிழ்தம் / சிருஷ்டி மின்னூல் (http://amizhthamemagazine.blogspot.com) மூலம் புது முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 2018 தமிழ் புத்தாண்டில் (April 14, 2018) முதல் இதழை வெளியிட்டனர்.
அந்த இதழுக்கு என் நேர்காணல் வேண்டும் என போனில் கேட்ட போது அவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து ஒப்புக்கொண்டேன். மின்னிதழை மிக அழகாக வடிவமைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து மின்னிதழின் ஆசிரியர் குழுவில் என்னை உறுப்பினராக இருக்க முடியுமா என கேட்டபோது என் திறமை மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் அன்புக்கும் கட்டுப்பட்டும், பெண்களால் நடத்தப்படும் தொழில்நுட்ப முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ஏற்றுக்கொண்டேன்.
இவர்கள் மாதந்தோரும் நடத்தும் கலைச்சாரல் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் நான் இவர்களை வாழ்த்திப் பேசிய வீடியோ லிங்க்…https://youtu.be/gsjvIPHo9rM
காம்கேர் கே.புவனேஸ்வரி
ஜூலை 20, 2018