புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு!

திரு. பரணிகுமார்…

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இனிய நினைவலைகளில்…

பூஜைகளும் ஹோமங்களும் செய்து ஆன்மிகத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்பட்டுவரும் தினகரனில் பணிபுரியும் திரு. பரணிகுமார் அவர்களுடன் ஒரு பூஜைக்கான நிகழ்ச்சிக்காக இன்று போனில் பேசினேன்.

மனதுக்குப் பிடித்த சேவை அதே துறையில் பணி இரண்டும் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அந்த வகையில் இவரும்.

பத்திரிகை, தொலைக்காட்சி உட்பட அனைத்து மீடியாக்களுமே, கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த என் திறமையையும் உழைப்பையும் வெளி உலகுக்கு வெளிச்சம்போட்டு காண்பித்துக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், என் ஆன்மிகப் பார்வையையும் முதன் முதலில் வெளி உலகுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்தவர் திரு. பரணிகுமார்.

தினகரன் ஆன்மிகப் பலன் இதழுக்காக இவர் என்னை நேர்காணல் செய்த கட்டுரை ‘புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு’ என்ற தலைப்பில்   அக்டோபர் 2010 –ல் வெளியானது.

மயிலாப்பூர் அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயிலில் 10-08-2010 முதல் 22-08-2010 வரை  நடைபெற்ற பன்னிரு திருமுறை விழாவில்  முதல்நாள்  நிகழ்ச்சியில் முதல் திருமுறை குறித்து  நான் உரை ஆற்றினேன்.

சாதாரண சொற்பொழிவுபோல் அல்லாமல், வித்தியாசமான கோணத்தில் புதுமையான நுட்பத்துடன் மல்டிமீடியா அனிமேஷன்களுடன் கூடிய சொற்பொழிவு செய்ததால், அதை  ‘புதுமை கோணத்தில் ஆன்மிக சொற்பொழிவு’ என்று தலைப்பிட்டார்.

2010 – ல் நான் செய்த முதல் ஆன்மிக சொற்பொழிவு பற்றிய செய்திக்கான லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=2160

அன்புடன்

காம்கேர் கே.புவனேஸ்வரி
ஆகஸ்ட் 16, 2018

 

 

(Visited 53 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari