அக்ஷர – 24 மொழிகளில் ஒரு இணைய இதழ்.
akshra – Multilingual Online Journal for Indian Writing.
இந்திய இலக்கியத்திற்கான பன்மொழி இணைய இதழ்.
சமகால இந்திய இலக்கியத்தை அந்தந்த மொழிகளின் வரி வடிவங்களிலேயே வெளியிட இந்திய மொழிகள் இருபத்தி நான்கிற்கும் இடமளித்துள்ளது ‘அக்ஷர’.
ஜூன் 2018 – ல் தொடங்கப்பட்ட அக்ஷர -இணைய இதழில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரம் இதழ் வலையேறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த மாத இதழ்களை சுலபமாகப் படிக்க ஒரு பொருளடக்கப் பக்கம் இணைய இணைப்புகள் (links) கொடுக்கப்பட்டுள்ளது.
மொழிவாரியாகத் தேர்ந்தெடுத்துப் படிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மொழியிலும் கட்டுரைகள், கவிதைகள், புனைகதைகள், நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்கள் (Essays, Poems, Fiction, Interviews, Reviews) என அசத்தலான ஐந்து பிரிவுகளில் விஷயங்களை வெளியிட முயற்சி நடக்கிறது.
மற்ற மொழிகளில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக மொழிபெயர்ப்புகளை வெளியிட ஒரு பகுதி… (Translations)
முந்தைய இதழ்களைப் படிக்க ஒரு பகுதி… (Archive)
அக்ஷர-வின் நிறுவனராகவும், வடிவமைப்பாளராகவும், எடிட்டராகவும் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்களாக இருந்தாலும். ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழியின் சிறந்த எழுத்தாளர்கள் / விமர்சகர்கள் (சிலர் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர்கள்) அந்த மொழி ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பது சிறப்பு.
இந்த இணைய இதழுக்கு தரமான படைப்புகளை எந்த மொழியிலும் அனுப்பலாம். அவை யூனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் வேண்டுகோள்.
இதுவரை மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. இந்த மாத இதழுக்கு http://www.akshra.org/
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
செப்டம்பர் 3, 2018








