வானவில் பண்பாட்டுமையம் 1994 –ல் இருந்து தொடர்ந்து 24 ஆண்டுகளாக மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறது.
இந்த வருடம் மகாகவியின் பிறந்த நாளை வானவில் பண்பாட்டு மையத்தின் வெள்ளிவிழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதன் பொருட்டு டிசம்பர் 8,9,10,11 இந்த 4 நாட்களை ‘பாரதி திருவிழா’ / ‘தேசபக்திப் பெருவிழா’ என்ற கான்செப்ட்டில் நிகழ்ச்சிகளை தயார் செய்துவருகிறார்கள்.
டிசம்பர் 8,9 – இந்த இரண்டு தினங்கள் சென்னை கலைவாணர் அரங்கத்திலும்,
(கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, காவல் நிலையத்துக்கு அடுத்த வளாகம், அண்ணா சிலையருகில்)
டிசம்பர் 10,11 – இந்த இரண்டு தினங்கள் திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்திலும்,
(பாரதியார் நினைவு இல்லம், டி.பி.கோயில் தெரு, பார்த்தசாரதி ஸ்வாமி கோயில் பின்புறம், திருவல்லிக்கேணி)
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நாட்களில் பாரதி குறித்த மாபெரும் கலைக்கண்காட்சியுடன் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நாடகம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முத்தாய்ப்பாக பாரதி பிறந்த தினமான டிசம்பர் 11 அன்று ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் இருந்து பாரதியார் இல்லம் வரை ஜதிபல்லக்கு ஊர்வலம் ஏற்பாடாகியுள்ளது.
பாரதியின் வெள்ளிவிழாவுக்கு அழைப்பு விடுக்கும் நோக்கமாக ஏராளமான எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உட்பட சினிமா, தொலைக்காட்சி, அரசியல், காவல்துறை, வக்கீல் என ஏராளமான பல்துறை வல்லுநர்கள் வீடியோவில் பாரதிப் புகழ் பாடி மக்களை அன்புடன் அழைத்திருக்கிறார்கள். அவற்றை இந்த லிங்கில் பார்வையிடலாம். https://www.youtube.com/channel/UCSrA_YMFe1Ucek804HciKMA/videos
மேலும் விவரங்களுக்கு வானவில் பண்பாட்டுமையத்தின் தலைவர் திரு. ரவி கல்யாணராமன் அவர்களை தொடர்புகொள்ளலாம்.
பாரதியைக் கொண்டாட தங்கள் குழந்தைகளுடன் அனைவரும் வர வேண்டுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி
நவம்பர் 23, 2018