அறம் வளர்ப்போம் 41-47

அறம் வளர்ப்போம்-41
பிப்ரவரி 10, 2020

பயம் –  தைரியத்தை துரத்தும், ஊக்கத்தை அழிக்கும், செயலில் செம்மையை குறைக்கும்.

தேவையில்லாத பயம் நம்முடைய தைரியத்தைத் துரத்தி அடிக்கும்.

பயத்தினால் உண்டாகும் தைரியக் குறைவு நம்முடைய ஊக்கத்தை அழித்துவிடும்.

எந்த ஒரு செயலையும் பயத்துடனேயே செய்தால் அதை செம்மையாக சரியாக செய்ய முடியாது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-42
பிப்ரவரி 11, 2020

தைரியம் –  பயத்தை துரத்தும், பலவீனத்தை அழிக்கும், செயலில் மேன்மையை கொடுக்கும்.

மனதில் தைரியத்துடன் இருக்கும்போது நமக்குள் இருக்கும் தேவையில்லாத பயங்கள் விலகும்.

பயத்தினால் உண்டாகும் பலவீனத்தை அழிக்கும் சக்தி வாய்ந்தது தைரியம்.

பயமில்லாமல் தைரியத்துடன் ஒரு செயலை செய்யும்போது அது நாம் செய்கின்ற செயலில் மேன்மையை உண்டாக்கும்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-43
பிப்ரவரி 12, 2020

நன்றி –  உதவியவர்களை மறவாதிருத்தல், உதவியவர்களுக்கு நம் மகிழ்ச்சியை தெரிவித்தல், உதவியவர்களை குறைகூறாமல் இருத்தல்

நமக்கு தக்க சமயத்தில் உதவியவர்களுக்கு நன்றி மறவாமல் இருக்க வேண்டும்.

நம் தேவைக்கு உதவியவர்களுக்கு நம் மகிழ்ச்சியையும், நன்றியையும் உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.

உதவி செய்தவர்களை கொண்டாடாவிட்டாலும் அவர்களைப் பற்றி குறைகூறாமலாவது இருக்க வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-44
பிப்ரவரி 13, 2020

உதவி –  தேவையானவர்களுக்கு செய்தல், பணமும் பொருளும் மட்டுமல்ல, செயல் மட்டுமல்ல உணர்வும்கூட.

தேவையானவர்களுக்கு தேவைப்படும்போது செய்வதே உதவி.

பணமும் பொருளும் கொடுத்து உதவுவது மட்டுமல்ல, தக்க சமயத்தில் சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் உதவிதான்.

உதவி என்பது செயல்மட்டுமல்ல, உதவுபவருக்கும் உதவி செய்பவருக்கும் ஒருசேர மகிழ்ச்சியைக் கொடுக்கும் உன்னதமான உணர்வு.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-45
பிப்ரவரி 14, 2020

இளமை காலம் – கல்வி கற்க வேண்டும், நல்லொழுக்க நெறிகளை பழக வேண்டும், திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இளமை காலத்தில் படிப்பது ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும். அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

வாழ்நாள் முழுவதற்குமான நல்லோழுக்க நெறிகளையும் கற்க வேண்டும்.

நம் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்தெடுக்க முயல வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-46
பிப்ரவரி 15, 2020

கர்வம் – அறிவை மழுங்கடிக்கும், பிறரை அவமரியாதை செய்யத் தூண்டும், மதிப்பை இழக்கச் செய்யும்

கர்வம் அறிவை மழுங்கடித்து நல்ல விஷயங்களை கண்களில் இருந்து மறையச் செய்யும்.

தன்னை தவிர மற்றவர்கள் அனைவருமே முட்டாள்கள் என்ற எண்ணத்தை விதைக்கும். ஒருவரது கர்வம் பிறரை அவமரியாதை செய்யவும் தயங்காது.

நம்முள் இருக்கும் கர்வம் பிறர் மத்தியில் நம் மதிப்பை இழக்கச் செய்யும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-47
பிப்ரவரி 16, 2020

மனநிறைவு –  திருப்தியடைதல், போதும் என்கின்ற மனம், பூரணத்துவம்

நமக்குக் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களிலும் மனநிறைவு அடைதல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும். ஏமாற்றங்களை குறைக்கும்.

‘போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பது பழமொழி. போதும் என திருப்திகொள்ளும் மனதுக்குப் பெயர்தான் மனநிறைவு.

நாம் செய்கின்ற செயல்களில் நிறைவு, நமக்குக் கிடைக்கின்றவற்றில் திருப்தி என பூரணத்துவம் பெறுவதற்கும் மனநிறைவு என்றே பெயர்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 327 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon