அறம் வளர்ப்போம் 62-68

அறம் வளர்ப்போம்-62
மார்ச் 2, 2020

கவனம் – ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க வேண்டும், நேர்த்தியாக செயலாற்றத் தூண்டும், நிறைவான பலனை கொடுக்கும்.

நான் செய்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் இருக்க வேண்டும்.

நான் கவனமாக செய்கின்ற ஒவ்வொரு செயலும் நேர்த்தியாக அமையப்பெறும்.

சிறப்பான கவனத்துடன் நேர்த்தியாக செய்கின்ற செயல்கள் நிறைவான பலனை கொடுக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-63
மார்ச் 3, 2020

அலட்சியம் – எந்த விஷயத்திலும் அலட்சியம் கூடாது, அலட்சியமாக செய்கின்ற பணிகள் நேர்த்தியாக அமையாது, நிறைவான பலனை கொடுக்காது.

எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியம் கூடாது.

அலட்சியமாக செய்கின்ற பணிகள் நேர்த்தியாக அமையாது.

அலட்சியமாக செய்கின்ற நேர்த்தியற்ற பணிகள் என்றுமே நிறைவன பலனை கொடுக்காது.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-64
மார்ச் 4, 2020

கடமை – பொறுப்புணர்வை கூட்டும், ஒழுக்கமாக வாழ வழிவகுக்கும், நிம்மதியான மனநிலையை கொடுக்கும்.   

கடமை என்பதை பொறுப்பு எனலாம். நம் ஒவ்வொருவருக்கும் நிறைய கடமைகள் உள்ளன. நமக்கு செய்துகொள்ள வேண்டியவை, நம் குடும்பத்துக்கு செய்ய வேண்டியவை, நம் நாட்டுக்கு செய்ய வேண்டியவை என பல்வேறு கடமைகள் உள்ளன.

ஒவ்வொரு விஷயத்திலும் பொறுப்பாக இருந்து கடமையாற்றும்போது அது நாம் ஒழுக்கமாக வழி வகுக்கும்.

ஒழுக்கமான வாழ்க்கைமுறை நிம்மதியான மனநிலையை கொடுக்கும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-65
மார்ச் 5, 2020

போலித்தனம் – உண்மைபோல நம்பச் செய்தல், ஏமாற்றுகின்ற முயற்சியின் முதல்படி,  பொய்யான வாழ்க்கைக்கு வித்திடும்.

போலி என்பது உண்மைக்கு எதிரானது. நடக்காத ஒரு விஷயத்தை உண்மைப்போல நம்பச் செய்வதற்கு போலித்தனம் என்று பெயர்.

பிறரை ஏமாற்றுவதற்கான முயற்சியின் முதல்படியே போலியாக நடித்து நம்ப வைப்பதே.

போலியாக நடித்து வாழ்வது நேர்மையற்ற பொய்யான வாழ்க்கைக்கு வித்திடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-66
மார்ச் 6, 2020

சுயமரியாதை – நம்மை நாம் மதித்தல், நம் மதிப்பை கூட்டும், நம் நேர்மையான எண்ணங்களும் செயல்பாடுகளும்.

நம்மை நாம் மதித்தலே சுயமரியாதை.

நம்மை நாம் மதிக்கும்போது நாம் நல்ல பழக்க வழக்கங்களுடன் வாழ முடியும். அப்போது நம் மனதில் ஒரு கம்பீரமும் தைரியமும் உண்டாகும். பிறர் மனதிலும் நம்மைப் பற்றிய மதிப்பு கூடும்.

நம்முடைய கனிவான பேச்சு, உண்மையான அன்பு, நேர்மையான செயல்பாடுகள் இவையே நம் சுயமரியாதையை காப்பாற்ற உதவும் காரணிகள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-67
மார்ச் 7, 2020

பேச்சு – நேர்மறையாக இருக்க வேண்டும், யாரையும் புண்படுத்தக் கூடாது, நம்பிக்கை அளிக்க வேண்டும்.

நாம் பேசுகின்ற பேச்சு நேர்மறை எண்ணங்களை பரவவிட வேண்டும்.

நல்ல வார்த்தைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். யாரையும் புண்படுத்தாதவாறு நயமாக இதமாக பேச வேண்டும்.

நம்முடைய பேச்சு பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-68
மார்ச் 8, 2020

செயல் – நம் எண்ணத்தின் வெளிப்பாடு, யாருக்கும் ஊறு விளைவிக்கக் கூடாது, எண்ணம் சொல் செயல் ஒன்றாக இருக்க வேண்டும்.

நம்மை வெளிப்படுத்தும் கண்ணாடியே நம்முடைய செயல். நாம் என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நம்முடைய செயலில் வெளிப்படும்.

நம் செயல்பாடுகள் பிறருக்கு ஊறு (கஷ்டத்தை) விளைவிக்கக் கூடாது.

நம் எண்ணம், சொல், செயல் இவை மூன்றும் ஒன்றுபோல் இருக்கும் மனிதர்களே நேர்மையானவர்கள்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 64 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon