அறம் வளர்ப்போம் 69-75

அறம் வளர்ப்போம்-69
மார்ச் 9, 2020

குறிக்கோள் – நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும், சாதனைகள் புரியத் தூண்டும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் அதிகரிக்கும்

நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அதுதான் நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும்.

நம்முடைய குறிக்கோள்தான் நமக்கு சாதனைகள் பல புரிய வைக்கத் தேவையான உந்துதலைக் கொடுக்கும்.

நமக்கான குறிக்கோள் நம்மை பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்ய வைத்து நம்மைச் சுற்றி நேர்மறை எண்ணங்களை பரவவிடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-70
மார்ச் 10, 2020

பேராசை –  அளவுக்கு அதிகமான ஆசை, பெரும் நஷ்டத்தை உண்டாக்கும்,  மன நிம்மதியை கெடுக்கும்.

நம் தகுதிக்கும் சக்திக்கும் அதிகமாக ஆசைப்படுவதற்கு பேராசை என்று பெயர்.

அளவுக்கு அதிகமாக ஆசைப்படும்போது அது பெருத்த பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தும். பேராசை பெரு நஷ்டம் என்று பழமொழியே உள்ளதே.

அதிகப்படியான ஆசையும் அதனால் உண்டாகும்  பொருள் நஷ்டமும் நம் மன நிம்மதியை அழித்துவிடும். அளவாக ஆசைப்படுவோம். ஆனந்தமாக வாழ்வோமே!

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-71
மார்ச் 11, 2020

வெற்றி –  திறமைக்கும் உழைப்புக்கும் கிடைக்கும் அங்கீகாரம், நாம் மட்டும் அடையும் நிலையல்ல, நம் செயல்பாட்டிற்கான பலன்

நம்முடைய திறமைக்கும் உழைப்புக்கும் கிடைக்கும் அங்கீகாரமே வெற்றி.

வெற்றி என்பது பிறரை முந்திச் செல்வது மட்டுமல்ல. பிறரையும் நம்முடன் இணைத்துக்கொண்டு முன்னேறுவதில் உள்ளது.

வெற்றி என்பது தனிநபர்களை வரையறுப்பதில்லை. அவர்களின் செயல்பாட்டிற்கு கிடைக்கும் பலன்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-72
மார்ச் 12, 2020

விளைவுகள் –  நம் செயல்களுக்கான பலன், நல்வினை நல்ல விளைவுகளை உண்டாக்கும், தீவினை தீய விளைவுகளுக்கு வித்திடும்.

வாழ்க்கையில் நாம் செய்கின்ற செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

நல்வினை எனப்படும் நல்ல செயல்கள் நல்ல விளைவுகளை உண்டாக்கும்.

தீவினை எனப்படும் தீய செயல்கள் தீய விளைவுகளுக்கு வித்திடும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-73
மார்ச் 13, 2020

அகமும் புறமும் –  அகம் என்பது உள், புறம் என்பது வெளி, அகமும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும்.

அகம் என்பது உள். நம் மனமே அகம்.

புறம் என்பது வெளி. நம் உடலே புறம்.

நம் அகமும், புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்கின்ற செயல்களை நேர்மறையுடன் செய்து முடிக்க முடியும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-74
மார்ச் 14, 2020

இன்பமும் துன்பமும்  நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது, இன்பம் உற்சாகத்தைக் கொடுக்கும், துன்பம் பக்குவத்தை ஊட்டும்.

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. நாம் இன்பத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருந்தால் நம்மை அகந்தைதான் ஆட்டிப்படைக்கும்.

நிழலின் அருமை கொளுத்தும் வெயிலில் இருந்து வருபவர்களுக்குத்தான் தெரியும். இன்பத்தின் அருமையை துன்பத்திலிருந்து விடுபடும் போதுதான் உணரமுடியும்.

நம் வாழ்க்கையில் இன்பம் நமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். துன்பம் நம் மனதை பக்குவப்படுத்தும்.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

அறம் வளர்ப்போம்-75
மார்ச் 15, 2020

 வெற்றியும் தோல்வியும்  நம் செயல்களுக்கான பலன்கள், முயற்சியே வெற்றி, முயற்சியின்மையும் சோம்பலுமே தோல்வி.

வெற்றியும் தோல்வியும் நாம் செய்கின்ற செயல்களுக்கான பலாபலன்கள் எனலாம்.

தோல்வி என்பது வெற்றியின் சிறு தடங்கலே. எனவே சோர்ந்துவிடாமல் மென்மேலும் வெற்றியை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வெற்றியின் மூலமந்திரமே முயற்சி. எனவே முயற்சி செய்வதே வெற்றிதான். முயற்சி செய்யாமல் சோம்பலாக இருப்பதுதான் தோல்வி.

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software, Chennai

(Visited 84 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon