ஒர்க்கஹாலிக்!
மனம் புத்துணர்வாக இல்லாமல்
கொஞ்சம் சோர்வாக இருந்தது!
சில தினங்களாய்
குவிந்திருந்த இமெயில்களில்
விளம்பர இமெயில்களையும்
ஜங்க் இமெயில்களையும்
தேவையில்லாத இமெயில்களையும்
நீக்கினேன்!
கிட்டத்தட்ட
250 இமெயில்களும்
மேல் தட்டித் தூக்கினேன்!
என்ன ஆச்சர்யம்?
இமெயில் இன்பாக்ஸூம்
சுத்தமானது
மனமும் புத்துணர்வானது!
ஏதோ ஒரு பணியை நிறைவாய் செய்த
திருப்தி உண்டானது.
மனம் கொஞ்சம் டல்லடிக்கும்போது
நான் கையாளும் உத்திகளும்
இதுவும் ஒன்று!
வேலை தரும் சோர்வை
வேலையாலேயே முறியடிப்பேன்.
ஆம். நான் ஒரு ஒர்க்கஹாலிக்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஏப்ரல் 24, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 32 times, 1 visits today)








