ஜம்முனு வாழ காம்கேரின் OTP-141: உற்சாக டானிக்!

 

பதிவு எண்: 872 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 141
மே 21, 2021

உற்சாக டானிக்!

இன்று காலை ஒருநிமிட வீடியோவை அப்லோட் செய்துவிட்டு இன்றைய பதிவுக்கு என்ன எழுதலாம் என யோசித்துக்கொண்டிருந்தபோது என் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்தது.

ஒரு எனர்ஜி பூஸ்ட் தகவல் அது. ஒரு படைப்பாளிக்கு இதுதவிர வேறென்ன வேண்டும்?

அவர் அனுப்பிய தகவல் உங்கள் பார்வைக்கு!

நமஸ்காரம் மேடம். நான் ரமணன். மதுரையில் வசிக்கிறேன்.  உங்கள் எழுத்தின் தீவிர வாசகர். நான் கொரோனா முதல் அலையிலும், இப்போது இரண்டாவது அலையிலும் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன். தற்சமயம் ஓய்வில் இருக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவி ஆன்லைனில் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார். நானும்.   இரண்டுமுறை உயிர்பிழைத்து வந்திருக்கிறேன்.

கடந்த வருடம் கொரோனா அலை ஆரம்பித்ததில் இருந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். ஓய்வில்லாமல் தினமும் எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள். நித்தம் அதை படிக்கும்போது எனக்குள் ஒரு பரவசம் தானாகவே  ஒட்டிக்கொள்கிறது.

குறிப்பாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்ததும் தினமும் ஒவ்வொரு பதிவாக தங்கள் இணையதளத்தில் இருந்து எடுத்து வாசித்து வருகிறேன். எழுதும் தங்களுக்கு என்ன வயதிருக்கும் என தெரியவில்லை. ஆனால் எழுத்து முதிர்ந்த அனுபவத்தைக் காட்டுகிறது.

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பிறகு இப்போதுவரை நான் உயிர்ப்பாக இருப்பதற்கு தங்கள் எழுத்தும் ஒரு காரணம். சோர்வாக இருக்கும்போது உங்கள் கட்டுரைகளை எடுத்து வாசிக்கிறேன். புது உற்சாக டானிக் சாப்பிட்ட தெம்பு வந்துவிடுகிறது. இது மிகைப்படுத்தல் அல்ல. என் மனதில் பட்டதை சொல்கிறேன். தொடர்ந்து எங்களுக்காக எழுதுங்கள். உங்கள் உடல்நிலை மற்றும் குடும்பத்தாரின் உடல்நிலையையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் மேடம்.

2-1/2 வருடங்களாக நான் எழுதிவரும் பதிவுகளை வாசிக்க விரும்புபவர்கள் அல்லது யாருக்கேனும் பரிந்துரைக்க நினைப்பவர்களுக்காக என் வெப்சைட் லிங்க் கொடுக்கிறேன்.
https://compcarebhuvaneswari.com/?cat=143

என் எழுத்து ஒருவரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்பதை கேட்கும்போதே சிலிர்க்கிறது. இதுபோன்ற அனுபவங்களை மனம் விட்டு யாரேனும் எப்போதேனும் பகிரும்போது மட்டுமே கிடைக்கும்.

அந்த வகையில் இன்றைய தினம் மிக மகிழ்ச்சியாக ஆரம்பித்துள்ளது. அனைவரும் பத்திரமாக பாதுகாப்பாக இருங்கள். உங்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பு. உங்கள் நாட்டின் பாதுகாப்பு. இந்தப் பிரபஞ்சத்தின் பாதுகாப்பு. கவனம். மிக பத்திரம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 810 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon