பதிவு எண்: 874 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 143
மே 23, 2021
நாம் செய்யும் செயல்கள் இறைசக்தியைப் பெறுவதற்கு என்ன செய்யலாம்?
நாம் செய்யும் செயல்கள் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால் அது மனநிறைவு. அதையே மகிழ்ச்சியாக்கிக் கொள்வதில் உள்ளது நம் சாமர்த்தியம். நாம் செய்கின்ற அதே செயல்கள் பிறருக்கு பயன்கொடுத்தால் அது ஆனந்தம். அதை பேரானந்தமாக்கிக் கொள்வதில் உள்ளது நம் புத்திசாலித்தனம்.
நாம் செய்யும் செயல்களால் நமக்குக் கிடைக்கின்ற மகிழ்ச்சி, ஆனந்தம் இது இரண்டைத் தவிர மூன்றாவதாக ஒன்று உள்ளது. அது என்ன தெரியுமா? இறைசக்தி. ஆங்கிலத்தில் Divine Power என்பர்.
அதை எப்படி கொண்டுவருவது?
நாம் செய்யும் செயல்களில் ஒழுக்கத்தையும், சமூக அக்கறையையும் கடைபிடித்தால் அந்த செயல்கள் தானாகவே இறைசக்தியை அடைந்துவிடும். ஒழுக்கம் நாம் இயங்கும் நம் வீட்டையும், நம்மை இயக்கும் நம் மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, சமூக அக்கறை நம் வீடு இயங்கும் இந்த சமூகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க. ஒருதுளி ஒழுக்கத்துக்கும், சமூக அக்கறைக்கும் அத்தனை சக்தி.
நான் செய்கின்ற செயல்களால் எனக்கு இந்த மூன்றும் கிடைக்கிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP