‘எவ்வளவு’ எவ்வளவுகள்?
இந்தக் கேள்வி
ஆண்களை நோக்கிய கேள்வி மட்டும் அல்ல,
பெண்களை நோக்கிய கேள்வியும் கூட!
எவ்வளவு தன்னம்பிக்கையானவள்
எவ்வளவு தைரியமானவள்
எவ்வளவு சுயமானவள்
எவ்வளவு நேர்மையானவள்…
ஆஹா
எவ்வளவு அற்புதமான மனுஷி!
.
.
.
இப்படி
‘எவ்வளவு’ எவ்வளவுகள்?
எட்டி நின்று
நாம் மற்றவர்களிடம்
பழகுவதைப் பார்க்கும்வரை…
கிட்டே நெருங்கி
அவர்களிட(மு)ம் நாம் அதே
தன்னம்பிக்கையை
தைரியத்தை
சுயத்தை
நேர்மையை
காண்பித்தால்
எங்கே காணாமல் போகிறது
அந்த ‘எவ்வளவு, எவ்வளவு’
வியப்புகளும் பட்டங்களும்?
முரண்!
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
July 6, 2021
#காம்கேர்_கவிதை #COMPCARE_Kavithai
(Visited 31 times, 1 visits today)