‘லேடீஸ் ஸ்பெஷல்’ வாழ்த்து

தன்னம்பிக்கைப் பெண்மணியான லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர்  திருமிகு. கிரிஜா ராகவன் அவர்களுடன் வெப்டிவி பிராஜெக்ட்டுக்கான சந்திப்புக்குப் பிறகு, அரைமணி நேரத்தில் என்னைப் பற்றி ஃபேஸ்புக்கில் எழுதி(வாழ்த்தி) எனக்கு சர்ப்ரைஸ் அளித்தார். அவரது வாழ்த்துரை உங்கள் பார்வைக்கு…

சுயதொழில் முனையும் சாதனைப் பெண்கள், STEP UP நிறுவனம் என்பதெல்லாம் இப்போதெல்லாம் ரொம்ப பெருமையான விஷயங்கள்.

ஒரு தொழில் ஆரம்பிப்பதென்பதே , அதோடு கூட தன்னையும் விளம்பரப்படுத்திக் கொள்வது என்றாகி விட்டது. சுய தொழில் ஆரம்பித்து ஆறு மாதங்கள் ஆவதற்குள்ளாகவே “ வெற்றி மங்கை”, “ சுயதொழில் சிங்கம்” என்று விருது வாங்கிக் ( !!! ) குவிப்பவர்களும் சிலர்.

கிட்டத்தட்ட சிவர் ஜூப்ளி கொண்டாடும் நிலைக்கு வந்துள்ள நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் Compcare K Bhuvaneswari  இன்னும் குடத்தில் இட்ட விளக்கு போல் ஜொலித்துக் கொண்டிருப்பவர்.

1992 லேயே இந்த நிறுவனத்தை ஆரம்பித்த புவனேஸ்வரி, உலக நாடுகளுக்கெல்லாம் சர்வ சாதாரணமாக software develpment செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார். கம்யூட்டரின் விலை ஒரு லட்சம் ரூபாய் விற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே , இந்தத் தொழிலை ஆரம்பித்தவர் இவர். இந்தியாவில் பெரிய பெரிய நிறுவனங்கள் Software துறையில் கால் பதித்து , லட்சக் கணக்கில் வேலை வாய்ப்புகள் பெருகிய காலங்களின் முன்னோடி இவர். அப்போதில் இருந்தே கம்யூட்டரைக் கற்றுக் கொள்ள எளிமையான விதத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதி வருபவர்.

கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட நூல்கள் இப்படி வெளியாகி உள்ளன.இவர் எழுதிஉள்ள பல புத்தகங்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளன என்பது கூடுதல் செய்தி !!!

அமைதி,அழுத்தம்,அசாத்திய திறமை,கலாசாரம் வழுவாத செயல்பாடுகள், வெற்றி போதை தலைகேறாத குணம், பெற்றோர் மேல் மாறாத அன்பு …………..என்கிற எல்லாமே சேர்ந்தது தான் புவனேஸ்வரியின் வெற்றி. அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு, குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் தொழில் தொடங்கி வெற்றி பெற நினைக்கும் பெண்களுக்கு ,புவனேஸ்வரி ஒரு பெரிய ரோல் மாடல். pl visit http://www.compcaresoftware.com

15 வருடங்களுக்கு மேலாக எனக்குத் தெரிந்த புவனேஸ்வரியை ,

இன்று அலுவலகத்தில் சந்தித்த போது ரொம்பவும் பெருமையாக இருந்தது. இப்படித்தான் இருக்க வேண்டும் பெண்கள் என்கிற ஆசி….ஆசை மனதில் ஓட அவரை வாழ்த்துகிறேன்.

அன்புடன்

கிரிஜா ராகவன்
ஏப்ரல் 2017

(Visited 176 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon