ஜம்முனு வாழ காம்கேரின் OTP-238: அஸ்திவாரத்தை திடமாக்குங்கள், கட்டிடம் ஜோராக வடிவம் பெறும்!

பதிவு எண்: 969 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 238
ஆகஸ்ட் 26, 2021 | காலை: 6 மணி

அஸ்திவாரத்தை திடமாக்குங்கள், கட்டிடம் ஜோராக வடிவம் பெறும்!

இன்று ஒரு வீடியோ பதிவு. நகைச்சுவை உணர்வை எல்லோராலும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வெளிப்படுத்த முடியுமா என்பதை இந்த வீடியோவில் சொல்லி இருக்கிறேன்.

ஏற்கெனவே எங்கள் காம்கேர் டிவியில் வெளியிட்டதுதான். ஆனாலும் நிறையபேர் காம்கேர் டிவி குறித்து கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக மாதிரிக்கு ஒரு வீடியோ. காம்கேர் டிவியின் முகவரி: https://www.youtube.com/c/CompcareKBhuvaneswari.

ஃபேஸ்புக்கில் பதிவுகளை எழுதி வெளியிடுவதைப் போல யு-டியூபில் வீடியோ பதிவுகள். ஆடியோ பாட்கேஸ்டிங்குகளை வெறொரு தளத்தில் செய்துகொண்டிருக்கிறேன். அனிமேஷன்களையும் ஆவணப்படங்களையும் அததற்கான தளத்தில் செய்கிறேன். தவிர கதை, கவிதை, இலக்கியம், புத்தகங்கள் என அது ஒரு தளத்தில்.

இப்படியாக, என்னுடைய எழுத்து என்பது என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. கிரியேட்டிவிட்டியின் ஒரு வடிவம்.

ஆம். என் திறமை கிரியேட்டிவிட்டி. அது எழுத்தாக, ஆடியோவாக, வீடியோவாக, அனிமேஷனாக, ஆவணப்படமாக என  பல்வேறு வடிவம் பெறுகின்றன.

நீங்களும் அடிப்படையில் உங்களுக்கான ஒரு திறமையை கண்டிபிடியுங்கள். அது தானாகவே அதற்கான வடிவத்தைப் பெறும்.

ஆனால் ஒரு விஷயம், அடிப்படைத் திறமையில் ஆழ்ந்த புலமை பெற வேண்டும். மேலோட்டமான ஞானம் அதற்கான ஒரிஜினல் வடிவத்தைக் கூட வடிமைத்துக்கொள்ளாது எனும்போது அது எப்படி பல்வேறு வடிவங்கள் எடுக்கும்?

எனவே அஸ்திவார்த்தை திடமாக்குங்கள். கட்டிடம் ஜோராக வடிவம் பெறும். வாழ்த்துகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 692 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon