ஜம்முனு வாழ காம்கேரின் OTP-244: 1000-வது நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில்…

பதிவு எண்: 975 / ஜம்முனு வாழ காம்கேரின் OTP – 244
செப்டம்பர் 1, 2021 | காலை: 6 மணி

1000-வது நாள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில்…

நேர்மறை விஷயங்கள் நமக்குள் ஏற்படும் மாற்றங்கள் நம்மை என்னவெல்லாம் செய்யும் என்பது குறித்து என் அனுபவங்கள் வாயிலாக  கடந்த 965 நாட்களாக, அதாவது 2019 ஆண்டு ஜனவரி 1-ல் இருந்து காலை 6 மணிக்கு நாள் தவறாமல் பதிவிட்டு வருகிறேன். 1000-மாவது பதிவை நெருங்க இன்னும் 25 நாட்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில் என் பதிவுகள் குறித்த உங்கள் அனைவரின் மேலான கருத்துக்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

ஒருவரின் படைப்பு பார்வையாளர்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால் ஒருவருக்கு ஏற்பட்ட தாக்கத்தை மற்றவர்கள் அறியும்போது அவர்களுக்குள்ளும் அந்தப் படைப்பின் தாக்கம் உண்டாகலாம்.

என் பதிவுகளை தவறாமல் படித்து வந்த உங்களுக்குள்ளும் ஏதேனும் மாற்றம் உண்டாகி இருக்கும். அந்த மாற்றம் பெரிய அளவில் இல்லை என்றாலும், சின்ன அசைவையாவது உண்டாக்கி இருக்கும்.

அப்படி உங்களுக்குள் ஏற்பட்ட தாக்கத்தை, அதிர்வுகளை, தங்கள் மேலான கருத்துக்களை  Overall View ஆக பதிவிட விருப்பம் இருப்பவர்கள் பின்னூட்டமிடுங்கள். மெசஞ்சரில் புகைப்படம் அனுப்புங்கள்.

என் எழுத்து அது சார்ந்த அனிமேஷன், ஆவணப்படங்கள், யு-டியூப் நிகழ்ச்சிகள் என அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை உண்டாக்கியது என்ற கோணத்தில் சொல்ல முடிந்தால் சிறப்பு.

பின்னாளில் அவை என் பதிவுகள் புத்தகமாகும்போது ‘வாசகர்கள் கருத்துக்கள்’என்ற தலைப்பில் இடம்பெறும்.

உங்கள் கருத்தையும் புகைப்படத்துடன் போஸ்ட்டராக்கி பதிவிடுகிறேன். அவற்றை அன்புடன் ஏற்று எனக்கான பொக்கிஷமாக்கிக் கொள்கிறேன்.

இதுவரை கருத்திட்டவர்களின் தொகுப்பை https://www.facebook.com/media/set/?set=a.5857737410967462&type=3 இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம்.

இதுபோல உங்கள் கருத்துக்களும் 1000-வது கொண்டாட்டத்தில் வெளிவர வேண்டுமா, நீங்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

நான் எழுதி வரும்
காம்கேரின் OTP பதிவுகள் குறித்து
Overall View ஆக
உங்கள் பார்வையை,
உங்களுக்கு பயன்பட்ட விவரங்களை,
உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை,
உண்டாக்கிய மாற்றத்தை பின்னுட்டமிடுங்கள்.

இவை எதுவுமே இல்லை…

சும்மா ஜாலிக்காகப் படித்தீர்களா?
பொழுதுபோக்கிற்காக படித்தீர்களா?

அதை வேண்டுமானாலும் பதிவிடுங்கள்.

உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும் விலை மதிப்பிட முடியாத அளவுக்கு பிரமாண்டமானது. ஒரு சிற்பத்தில் அல்லது சிலையில் உள்ள ஒவ்வொரு துகளும் எப்படி மதிப்புள்ளதாகிறதோ அந்த அளவுக்கு உயர்வானது.

எனவே, 1000-வது நாள் கொண்டாட்டத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பையும் எதிர்பார்க்கிறேன்.

டைப் செய்ய தெரியாதவர்கள் பேப்பரில் கையெழுத்தில் எழுதி போட்டோ எடுத்து வெளிப்படுத்துங்கள். நான் டைப் செய்துகொள்கிறேன். பின்னர் நான் தனித்தகவலில் புகைப்படம் பெற்றுக்கொள்கிறேன்.

என் எழுத்து, தொழில்நுட்பம், சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆவணப்படங்கள் வாயிலாக எங்கள் காம்கேரின் படைப்புகளுடன் இணைந்து பயணம் செய்யும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

முக்கியக் குறிப்பு:

புகைப்படம் அனுப்பாதவர்களின் கருத்துக்களை பதிவிட இயலாது. எனவே தங்கள்  கருத்துக்களை பதிவு செய்பவர்கள் புகைப்படத்தையும் மெசஞ்சரில் அனுப்பி வைத்தால் மட்டுமே அதை நான் ஆவணப்படுத்த முடியும். நானாக உங்கள் டைம்லைனில் சென்று புகைபடத்தை எடுத்துக்கொள்ள மாட்டேன். அது சரியான அணுகுமுறையும் கிடையாது.

இங்கு பதிவிட முடியாதவர்கள் Compcare K Bhuvaneswari – CKB இந்த லிங்கில் பதிவிடுங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

#காம்கேர்_OTP #COMPCARE_OTP

(Visited 2,021 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon