அவள் விகடன்: வெற்றிக்கொடி! (March 2000)
2000- ல் ஒருநாள் விகடனில் ஒரு பிராஜெக்ட்டுக்காகச் சென்றிருந்தேன். அப்போது அவள் விகடனில் இருந்து நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார்கள். வழக்கம்போல வெகு சீரியஸாக நான் பேசிக்கொண்டிருக்க, என்னை பொன் காசிராஜன் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்… தயாமலர் அவர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தார்… அப்போது லோகநாயகி மேடம் (இப்போது குமுதம் சிநேகிதியின் எடிட்டர்) சொன்ன வார்த்தைகள் இன்னும் நினைவிருக்கிறது….
தமிழில் கம்ப்யூட்டர் நூல்களை அதிக அளவில் எழுதிய ஒரே நூலாசிரியர் – கண்ணதாசன் பதிப்பகம் (ஜனவரி 2000)
இன்றைய லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் மொழிகளுக்கெல்லாம் அத்தியாவசியமானதும், இன்று சாஃப்ட்வேர் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பல்வேறு சாஃப்ட்வேர்களுக்கெல்லாம் அடிப்படையான C#.NET, VB.NET, C++ போன்ற சாஃப்ட்வேர்களுக்கு, 2000-களிலேயே புத்தகம் எழுதிய காம்கேர் கே. புவனேஸ்வரியின் நூல்கள் பலவற்றை பதிப்பித்ததுடன், அவற்றுடன் கூடவே சிடியில் விளக்க கையேடும் வெளியிட்டு சிறப்பித்த கண்ணதாசன் பதிப்பக காந்தி கண்ணதாசன் அவர்கள் காம்கேர்…