‘தினமலர்’-வேலூர் எடிஷன் வாழ்த்து

தனி ஒரு பெண்ணாய் தலைமை தாங்கி ஒரு நிறுவனத்தை 25 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது எத்தனை பெரிய காரியம்.

அநேகமாக, மவுண்ட் ரோட்டில் உள்ள காந்தளகம் புத்தக கடையில் வாங்கிய ஒரு நூலில் இருந்த அவர் முகவரி பார்த்துதான் Compcare K Bhuvaneswariயிடம் பேசினேன்.

எனக்கும், அவருக்கும் பல ஒற்றுமை.

செய்யும் தொழிலில் 100 சதவீதம் நேர்த்தி, நேர்மை. எதிலும் வெளிப்படைத்தன்மை. கடின உழைப்பு.

ஆண் ஆணவ மீடியா உலகிலும், மென்பொருள் தொழிலும் பெரும் போராட்டத்தை புன்னகையுடன் அவர் தொடர்வது ஆச்சர்யம்.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றும் அவரின் தொழில் கால் நூற்றாண்டு கடந்து நூறாண்டு பேர் சொல்ல வாழ்த்துகிறேன்.

சேது நாகராஜன்
செப்டம்பர் 24, 2017

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!